இந்தியாவில் கேப்டர் SUV மாடலின் சோதனையை தொடங்குகிறது ரெனால்ட்

ரெனால்ட் இந்தியா நிறுவனம் கேப்டர் SUV மாடலின் சோதனையை இந்தியாவில் தொடங்க திட்டமிட்டிருக்கிறது. ஏற்கனவே ஆராய்ச்சி மற்றும் வளர்சிப் பணிகளுக்காக கேப்டர் SUV மாடல் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரெனால்ட் நிறுவனம் அதிகாப்பூர்வமாக கேப்டர் SUV  மாடலை சில நாட்களுக்கு முன்பு தான் வெளிப்படுத்தியது. இந்த மாடல் முதலில் ரஸ்யாவில வெளியிடப்படும் பிறகு இந்தியாவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாடல் ஐரோப்பாவில் விற்பனையில் இருக்கும் கேப்டர் மாடல் கிடையாது.  அந்த மடலின் வடிவத்தை மட்டும் அப்படியே பயன் படுத்தி டஸ்டர் மாடலின் அடிப்படையில் இந்தியா  போன்ற நாடுகளுக்கென  பிரத்தியேகமாக  வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் டஸ்டர் மாடலில் உள்ள அதே என்ஜின் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாடல் 4333 மிமீ நீளமும், 1813 மிமீ அகலமும், 1613 மிமீ உயரமும் மற்றும் 204 மிமீ தரை இடைவெளியும் கொண்டது. 387 லிட்டர் கொள்ளளவு பொருள்கள் வைக்க(Boot  Space ) இட வசதி கொண்டது. 

இந்த மாடல் டஸ்டர் மாடலுக்கு  மேலாக நிலைநிறுத்தப்படும்.  மேலும் இந்த மாடல்  மகிந்திரா XUV500, டாடா ஹெக்சா போன்ற  மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.