நாளை வெளியிடப்படும் 2016 ஸ்கோடா சூப்பர்ப்

ஸ்கோடா நிறுவனம் மூன்றாம் தலைமுறை சூப்பர்ப் மாடலை நாளை (பிப்ரவரி 23)  வெளியிடப்படும் என அறிவித்துள்ளது. ஸ்கோடா நிறுவனம் தனது இணையத்தில் 2016 ஆம் ஆண்டு சூப்பர்ப் மாடலை சில நாட்களுக்கு முன்பு தான்  அறிமுகம் செய்தது.

புதிய தலைமுறைக்கு ஏற்றவாறு ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள், பகல் நேரத்தில் ஒளிரும் LED விளக்குகள் என வெளிப்புறத்தில் நிறைய ஒப்பனை மாற்றங்கள் செய்யப்படுள்ளன. மேலும் உட்புறத்திலும் டச் ஸ்க்ரீன் சிஸ்டம், தானியங்கி குளிரூட்டி என ஏராளமான வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த மாடல் அதே 1.8 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் என்ஜினிலேயே கிடைக்கும். இதன் பெட்ரோல் என்ஜின் 158 Bhp திறனையும் 250 Nm இழுவைத் திறனையும் வழங்கும். இது மேனுவல் மற்றும் ஆட்டோமெடிக் என இரண்டு விதங்களிலும் கிடைக்கும். இதன் டீசல் என்ஜின் 138 Bhp திறனையும் 320 Nm இழுவைத் திறனையும் வழங்கும். இதன் டீசல் என்ஜின் மாடல் ஆட்டோமெடிக் கியர் பாக்ஸில் மட்டுமே கிடைக்கும். 

இந்த மாடல் ஹோண்ட அக்கார்ட், வோல்க்ஸ் வேகன் பேசட் போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும். மேலும் 22 முதல் 27 லட்சம் வரை விலை கொண்டதாகவும் இருக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.