இங்கிலாந்து இக்னிஸ் மாடலின் விலையை வெளியிட்டது சுசூகி

சுசூகி நிறுவனம் இங்கிலாந்தில் வெளியிடப்படும் இக்னிஸ் மாடலில் விலையை வெளியிட்டுள்ளது. இங்கிலாந்தில் இதன் விலை 9,999 யூரோவில் இருந்து 13,999 யூரோ வரை இருக்கும் என அறிவித்துள்ளது. இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.8.6 லட்சம் முதல் ரூ.12.2 லட்சம் வரை விலை கொண்டதாக இருக்கும். இங்கிலாந்தில் இந்த மாடலின் டாப் வேரியண்டில் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கிடக்கும். ஆனால் இந்தியாவில் இது கிடைக்குமா என்பது சந்தேகமே.  இந்தியாவில் இந்த மாடல் 2017  ஆம் ஆண்டு ஆரம்பத்தில் ரூ.5 லட்சம் முதல் ரூ.8 லட்சம் விலையில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாடல் 4 மீட்டருக்கு குறைவான ஒரு கிராஸ் ஓவர் மாடல் ஆகும். இந்த மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.3 டீசல் என்ஜின்களில் கிடைக்கும்.  இதன் பெட்ரோல் என்ஜின்  83 bhp திறனையும் 115 Nm இழுவைதிறனையும் வழங்கும். இதன் டீசல் என்ஜின் 74 bhp திறனையும் 190 Nm இழுவைதிறனையும் வழங்கும். மேலும் இந்த மாடல் ஆட்டோமேடிக் கியர் பாக்சிலும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாடல்  5 முதல் 8 லட்சம் விலை கொண்டதாகவும் மகிந்திரா KUV 100 மாடலுக்கு போட்டியாகவும்  இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.