ஏழு இருக்கை கொண்ட ஹாரியர் மாடலின் டீசரை வெளியிட்டது டாடா

டாடா நிறுவனம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஏழு இருக்கை கொண்ட ஹாரியர் SUV மாடலின் டீசரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. மேலும் இந்த மாடல் 2019 ஆம் ஆண்டு ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்படும் எனவும் அறிவித்துள்ளது. 

இந்த மாடல் டாடா வின் புதிய OMEGA (Optimal Modular Efficient Global Advanced) எனும் பிளாட்பார்மில் டாடா ஹாரியர் மாடலின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பிளாட்பார்ம் லேன்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் மாடலின் D8 ஆர்கிடெக்ச்சர் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.  மேலும் இதன் பின்புறம் முழுவதுமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த மாடல் ஹாரியர் எனும் பெயரில் அல்லாமல் புதிய பெயரில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த மாடல் 2.0 லிட்டர் க்ரையோடெக் டீசல் எஞ்சினில் தான் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இதன் செயல்திறன் மேம்படுத்தப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மௌவலுடன் தொடர்பில் இருங்கள்...

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.