டாடா கைட்5 மாடலின் சோதனை ஓட்ட படங்கள் கசிந்தது

டாடா கைட்5 காம்பேக்ட் செடான் மாடலின் சோதனை ஓட்ட படங்கள் இணையத்தில் கசிந்தது. டாடா நிறுவனம் டியாகோ மாடலின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட டாடா கைட் 5 எனும் காம்பேக்ட் செடான் மாடலை 2016 டெல்லி வாகன கண்காட்சியில் காட்சிப்படுத்தியது. இது டாடா நிறுவத்தின் மூன்றாவது காம்பேக்ட் செடான் மாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

ப்ளூ வண்ண கார் சோதனை ஓட்டத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. டாடா நிறுவனம் சரிந்து போன தனது சந்தையை மீண்டும் பெற தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. அதற்காக பல புதிய மாடல்களை விரைவில் வெளியிட முனைப்பு காட்டி வருகிறது.

டியாகோ மாடலை அப்படியே பின்புறத்தை மட்டும் மாற்றி செடான் மாடலாக வடிவமைத்துள்ளது. இருப்பினும் பின்புற வடிவத்தை சற்று சிறப்பாகவே வடிவமைத்துள்ளது டாடா நிறுவனம். இந்த மாடலும் டியாகோ மாடலை போலவே 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.05 லிட்டர் டீசல் என்ஜினில் கிடைக்கும். 

இந்த மாடல் அடுத்த வருட ஆரம்பத்தில் அல்லது இந்த வருட இறுதியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.