கைட்5 கான்செப்ட் மாடலின் பெயரை டிகோர் என அறிவித்தது டாடா

டாடா நிறுவனம் கைட்5 கான்செப்ட் மாடலின் பெயரை டிகோர் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த மாடல் டாடாவின் இம்பேக்ட் டிசைன் தாத்பரியத்தில் அடுத்து வெளியிடப்படும் மாடல் ஆகும். டாடா நிறுவனம் டியாகோ மாடலின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட டாடா கைட் 5 எனும் காம்பேக்ட் செடான் மாடலை 2016 டெல்லி வாகன கண்காட்சியில் காட்சிப்படுத்தியது. இது டாடா நிறுவத்தின் மூன்றாவது காம்பேக்ட் செடான் மாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

டியாகோ மாடலை அப்படியே பின்புறத்தை மட்டும் மாற்றி செடான் மாடலாக வடிவமைத்துள்ளது. இருப்பினும் பின்புற வடிவத்தை மிகவும் சிறப்பாகவே வடிவமைத்துள்ளது டாடா நிறுவனம்.

இந்த மாடல் 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் ரெவோடார்க் டீசல் என்ஜினில் கிடைக்கும். இதன் 1.0 லிட்டர் என்ஜின் டாடா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட புதிய எஞ்சின் என்பது குறிப்பிடத்தக்கது.  இதன் 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் என்ஜின் 85 Bhp திறனையும் 114 Nm இலுவைதிரனையும் வழங்கும். இதன் 1.0 லிட்டர் ரெவோடார்க் டீசல் என்ஜின் 70 Bhp திறனையும் 140 Nm இழுவைதிறனையும் வழங்கும். 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.