டமோ எனும் புதிய பிராண்டை அறிமுகப்படுத்தியது டாடா மோட்டார்ஸ்

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய டமோ எனும் துணை பிராண்டை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் இந்த பிராண்டின் முதல் மாடலை இந்த வருடம் நடைபெறும் ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் அறிமுகப்படுத்த உள்ளது.

இந்த பிராண்டில் அனைத்து மாடல்களும் நவீன தொழிநுட்பத்துடனும், புதுமையான அம்சங்களும் மற்றும் அதிக சொகுசு அனுபவம் கொண்டதாகவும் இருக்கும். மேலும் புதிய நிறுவனம் முதல் பெரிய நிறுவனம் வரை அனைத்து நிறுவனங்களுடனும் இணைந்து பணியாற்ற உள்ளது. மேலும் இதன் அனைத்து மாடல்களும் எதிர்கால தொழிநுட்பத்திற்கு ஏற்றவாறு எளிதில் மாற்றம் செய்ய முடியுமாறு வடிவமைக்கப்பட உள்ளது. மேலும், நவீன தொழில்நுட்ப அம்சங்களை மேம்படுத்தவும், புதிய மாடல்களை விரைவாக தயாரிக்கவும் இந்த புதிய டாமோ பிராண்டை டாடா மோட்டார்ஸ் பயன்படுத்த உள்ளது. ஆட்டோமொபைல் துறையில் உள்ள சவால்களுக்கு தீர்வு காண்பதற்கும் டாமோ பிராண்டை டாடா மோட்டார்ஸ் பயன்படுத்த உள்ளது. 

டமோ பிராண்டில் 7-8 மாடல்களை இரண்டு பிளாட்பார்மில் வெளியிடப்பட உள்ளது. இவற்றில் ஹேட்ச்பேக் மற்றும் SUV  மாடல்கள் அதிகமாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.  டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முதல் மாடலை இந்த வருடம் நடைபெறும் ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் அறிமுகப்படுத்த உள்ளது. மேலும் இந்த மாடல் ஒரு ஸ்போர்ட்ஸ் கூப் ரக மாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.