செஸ்ட் ப்ரீமியோ சிறப்பு பதிப்பு மாடலை வெளியிட்டது டாடா

டாடா நிறுவனம் 85,000 க்கும் மேற்பட்ட செஸ்ட் மாடல்கள் விற்பனை ஆனதை தொடர்ந்து செஸ்ட் ப்ரீமியோ சிறப்பு பதிப்பு மாடலை வெளியிட்டுள்ளது. இந்த சிறப்பு பதிப்பு மாடல் டீசல் என்ஜின் ஆப்ஷனில் மட்டும் ரூ 7.53 லட்சம் டெல்லி ஷோரூம் விலையில் கிடைக்கும். மற்றும் இந்த மாடலில் கூடுதலாக 13 புதிய உபகரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளதாக டாடா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த மாடலில் ஒப்பனை மாற்றங்கள் மட்டுமே கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ளது. 

செஸ்ட் ப்ரீமியோ சிறப்பு பதிப்பு மாடலில் கொடுக்கப்பட்டுள்ள மாற்றங்கள்:

  • கருப்பு நிற ரூப்
  • கருப்பு நிற பக்கவாட்டு கண்ணாடி
  • டேன் பினிஸ்ட் டேஷ்போர்ட் அலங்காரம் 
  • ஸ்மோக்ட் முகப்பு விளக்குகள்
  • இரட்டை வண்ண பம்பர் 
  • கருப்பு வண்ண பூட் லிட் கார்னிஷ் 
  • ப்ரீமியோ சிறப்பு பதிப்பு பேட்ஜ் 
  • கருப்பு வண்ண வீல் கவர் 
  • கருப்பு வண்ண பின்புற ஸ்பாய்லர் 
  • புதிய இருக்கை கவர்

இந்த சிறப்பு பதிப்பு மாடல் க்ரே மற்றும் சில்வர் என இரண்டு வண்ணங்களில் மட்டுமே கிடைக்கும். 

ஞினில் எந்த மாற்றமும் இல்லை, அதே 1.3 லிட்டர் கோட்ராஜெட் டீசல் என்ஜினில் தான் கிடைக்கும். இந்த எஞ்சின் 75 bhp (4000 rpm) திறனும் 190Nm (1750-3000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இந்த திறன் ஐந்து ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் மூலம் வீலுக்கு கடத்தப்படுகிறது. மேலும் இந்த மாடலில் ஹர்மான் நிறுவனத்தின் டச் ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட் சிஸ்டமும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.