இந்த வருட இறுதிக்குள் வெளியிடப்படும் டாடா நெக்சன் காம்பேக்ட் SUV

டாட்டா நிறுவனத்தின் நெக்சன் காம்பேக்ட் SUV  மாடல் இந்த வருட இறுதிக்குள் டாட்டா கைட் 5 காம்பேக்ட் செடான் மாடலுக்கு முன்பாகவே வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா நிறுவனம் நெக்சன் காம்பேக்ட் SUV மாடலை 2016 டெல்லி வாகன கண்காட்சியில் வெளிப்படுத்தியது. இது டாடா நிறுவனத்தின் இம்பேக்ட் டிசைன் எனும் வடிவமைப்பின் அடிப்படையில்வடிவமைக்கப்பட்டது.


இதன் கான்செப்ட் மாடல் சில வருடங்களுக்கு முன்பே வெளியிடப்பட்டது. இந்த தயாரிப்பு நிலைமாடளுக்கும் கான்செப்ட் மாடளுக்கும் பெரிய வேறுபாடுகள் ஏதும் இல்லை. இது ஒரு SUV என்று சொல்லப்பட்டாலும்  ஹேட்ச்பேக்  போன்ற தோற்றத்தை தருவதை தவிர்க்க முடியவில்லை. எனினும் தரை இடைவெளி அதிகமாக இருக்கும்.  மேலும் உட்புறத்தில் டச் ஸ்க்ரீன் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாடல் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜினில் கிடைக்கும் எனஎதிர்பார்க்கப்படுகிறது. விலை நிர்ணயிப்பதில் டாடா நிறுவனத்தை அடித்துக்கொள்ள யாரும் இல்லை அந்த வகையில் இந்த மாடலும் சவாலான விலையில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

விரைவில் இந்த மாடலுக்கு முன்பு டாடா சைக்கா மாடல் வெளியிடப்படும். ஆனால் தற்போது  மக்களை பெரிது அச்சுறுத்தும் சைக்கா  வைரஸ் காரணமாக இந்த மாடலின் பெயரை மாற்ற ஏற்கனவே முடிவு செய்துள்ளது அனைவரும்  அறிந்த செய்தி.எனவே இந்த மாடல் விரைவில் புதிய பெயருடன் வெளியிடப்படும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.