C-கியூப் ஹேட்ச்பேக் கான்செப்ட் மாடலை வெளிப்படுத்தியது டாடா

டாடா நிறுவனம் பியூச்சர் டீகோடேட் என மைக்ரோசாப்ட் நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் C-கியூப் ஹேட்ச்பேக் கான்செப்ட் மாடலை வெளிப்படுத்தியுள்ளது. இந்த மாடல் டாடா வின் புதிய  டமோ பிராண்டில் வெளியிடப்படும். டாடா மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் இனைந்து கனக்டெட் கார் தொழில்நுட்பத்தை தயாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த மாடல் தொடர்பான விவரங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை. வெறும் படங்கள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. டாடா நிறுவனம் இம்பேக்ட் டிசைன் தாத்பரியத்தில் மிகச்சிறப்பாக இந்த மாடலை வடிவமைத்துள்ளது. இந்த மாடல் டியாகோ மாடலுக்கு மேலாக நிலை நிறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய டமோ எனும் துணை பிராண்டை ஏற்கனவே அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் இந்த பிராண்டின் முதல் மாடலை இந்த வருடம் நடைபெறும் ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் அறிமுகப்படுத்த உள்ளது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.