ரூ. 4.7 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது டாடா டிகோர் காம்பேக்ட் செடான்

டாடா நிறுவனம் டியாகோ மாடலின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட  டிகோர் காம்பேக்ட் செடான் மாடலை ரூ. 4.7 லட்சம் டெல்லி ஷோரூம் ஆரம்ப விலையில் வெளியிட்டுள்ளது. இந்த காம்பேக்ட் செடான் மாடலை 2016 டெல்லி வாகன கண்காட்சியில் காட்சிப்படுத்தியது. இது டாடா நிறுவத்தின் மூன்றாவது காம்பேக்ட் செடான் மாடல் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாடல் பெட்ரோல் எஞ்சினில் நான்கு வேரியண்டுகள் மற்றும் டீசல் எஞ்சினில் நான்கு வேரியண்டுகள் என எட்டு வேரியண்ட்டுகளில் வெளியிடப்பட்டுள்ளது.

வேரியன்ட் வாரியாக டெல்லி ஷோரூம் விலை விவரம்:

பெட்ரோல்:
XE - ரூ 4,70,000
XT - ரூ 5,41,000
XZ - ரூ 5,90,000
XZ (O) - ரூ 6,19,000

டீசல்:
XE - ரூ 5,60,000
XT - ரூ 6,31,000
XZ - ரூ 6,80,000
XZ (O) - ரூ 7,09,000

டியாகோ மாடலை அப்படியே பின்புறத்தை மட்டும் மாற்றி செடான் மாடலாக வடிவமைத்துள்ளது. இருப்பினும் பின்புற வடிவத்தை மிகவும் சிறப்பாகவே வடிவமைத்துள்ளது டாடா நிறுவனம். இந்த மாடலில் ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள், LED பின்புற விளக்குகள், LED ஸ்டாப் விளக்கு, 5 - இன்ச் ஹர்மான் டச் ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட் சிஸ்டம், பெட்ரோல் மாடலில் 15 இன்ச் அலாய் வீல் மற்றும் டீசல் மாடலில் 14 இன்ச் அலாய் வீல் என ஏராளமான வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாடல் 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் ரெவோடார்க் டீசல் என்ஜினில் கிடைக்கும். இதன் 1.0 லிட்டர் என்ஜின் டாடா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட புதிய எஞ்சின் என்பது குறிப்பிடத்தக்கது.  இதன் 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் என்ஜின் 85 Bhp திறனையும் 114 Nm இலுவைதிரனையும் வழங்கும். இதன் 1.0 லிட்டர் ரெவோடார்க் டீசல் என்ஜின் 70 Bhp திறனையும் 140 Nm இழுவைதிறனையும் வழங்கும். இதன் பெட்ரோல் மாடல் 20.3 Kmpl மைலேஜையும், டீசல் மாடல் 24.7 Kmpl மைலேஜையும் வழங்கும். இந்த மாடல் ஹோண்டா அமேஸ், வோல்க்ஸ் வேகன் அமியோ, டாடா செஸ்ட், போர்ட் ஆஸ்பயர், மாருதி சுசூகி ஸ்விப்ட் டிசைர் மற்றும் ஹூண்டாய் எக்ஸன்ட் போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.