கைட் மாடலின் வரைபடங்களை வெளியிட்டுள்ளது டாடா

டாடா நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு தான் லியோனல் மெஸ்ஸியின் நடிப்பில் உருவான முதல் தொலைகாட்சி விளம்பரத்தை  கைட் மாடலின் டீசர் உடன் சேர்த்து வெளியிட்டது. தற்போது கைட் மாடலின் வரைபடத்தை வெளியிட்டுள்ளது. முகப்பு விளக்கு, பின்புற விளக்கு மற்றும் கைப்பிடிகள் ஆகியவற்றின் படங்களை மட்டும் முன்பு வெளியிட்ட டீசரில் இருந்தது. கைட் மாடல் ஹேட்ச்பேக் மற்றும் செடான் என இரண்டு விதங்களிலும் வெளியிடப்படும்.


எஞ்சின் பற்றிய எந்த ஒரு தகவலும் இல்லை பெரும்பாலும் இந்க மாடலில் உள்ள எஞ்சிநிலேயே வெளியிடப்படலாம். இருப்பினும் புதிய பெட்ரோல் எஞ்சினிலும் இந்த மாடல் வெளியிடப்படும். இதன் செடான் மாடல் இந்தியாவிலேயே மிக குறைந்த விலை கொண்ட செடான் மாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாடல் மாருதி செளிரியோ, செவ்ரொலெட் பீட் போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும். மேலும் இந்த மாடல் இண்டிகா  மற்றும் இண்டிகோ மாடல்களுக்கு மாற்றாக இருக்கும் எனவே எதிர்பார்க்கப்படுகிறது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.