2.7 லட்சம் முன்பதிவுகளை பெற்று அசத்திய டெஸ்லா மாடல் 3

சென்ற வாரம் வெளிப்படுத்தப்பட்ட டெஸ்லா மாடல் 3 இதுவரை 2.7 லட்சத்திற்கும் அதிகமான முன்பதிவுகளை உலகம் முழுவதும் பெற்றுள்ளது. இது டெஸ்லா நிறுவனத்தின் விலை குறைந்த மாடல் என்பதால் அமோக வரவேற்பை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. டெஸ்லா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக மாடல் 3 உடன்  இந்தியாவில் விற்பனையை தொடங்க இருக்கிறது.

இந்த மாடலின் விநியோகம் அடுத்த வருடம்  தான் தொடங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 1000 டாலர்களை செலுத்தி இந்த மாடலை முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பணமாக மட்டும் டெஸ்லா நிறுவனம் இதுவரை 2.7 பில்லியன் டாலர்களை பெற்று திக்குமுக்காடிபோயுள்ளது.

இந்த மாடல் டெஸ்லா மாடல் S ன் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட ஒரு எலெக்ட்ரிக் SUV  மாடல் ஆகும். இந்த மாடல் 100 கிலோமீட்டர் வேகத்தை 6 வினாடிகளுக்குள் கடந்து விடும் மேலும் அதிகபட்சமாக மணிக்கு 320 கிலோமீட்டர் வேகம் வரையும் செல்லும் வல்லமை கொண்டது. 

இந்த மாடல் ஆடி A4, BMW  3 சீரீஸ், மெர்சிடிஸ் பென்ஸ் C - கிளாஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும். இந்த மாடல் இந்தியாவில் ரூ. 35 முதல் 45 லட்சம் விலை கொண்டதாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.