மாடல் X எலெக்ட்ரிக் SUV யை அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தியது டெஸ்லா நிறுவனம்

உலகின் மிகச்சிறந்த எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா நீண்ட நாட்களாகவே மாடல் X எலெக்ட்ரிக் SUV காரை சோதனை செய்து வருகிறது. இந்நிலையில் தற்போது அதிகாரப்பூர்வமாக இந்த மாடலை டெஸ்லா நிறுவனம் வெளிப்படுத்தியுள்ளது. 

இந்த மாடலில் ஆல் வில் டிரைவ் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் 100 கிலோ மீட்டர் வேகத்தை 3.2 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது மற்றும் அதிகபட்சமாக மணிக்கு 250 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லும். அனைத்திற்கும் மேலாக இந்த மாடல் சுத்தமாக சுற்றுச்சூழலை  மாசுபடுத்தாது  என்பது  குறிப்பிடத்தக்கது.  

மேலும் இந்த மாடலின் மிகசிறந் அங்கமாக டெஸ்லா நிறுவனம்  குறிப்பிடுவது இறக்கை போன்று திறக்ககூடிய இரண்டாம் வரிசை கதவுகள். இது இரண்டாம் மற்றும் மூன்றாம் வரிசை இருக்கைகளுக்கு எளிதாக செல்ல உதவும். 

விரைவில் இந்த மாடலை டெஸ்லா நிறுவனம் விற்பனைக்கு கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது உலகின் முதல் எலெக்ட்ரிக் SUV மாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.