2018 ஆம் ஆண்டு டெல்லி வாகன கண்காட்சி நுழைவுசீட்டு முன்பதிவு ஆரம்பம்

டெல்லியில் நடைபெறும் வாகன கண்காட்சி உலகளவில் பெயர்பெற்றது. இது இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும். தற்போது 2018 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் டெல்லி வாகன கண்காட்சியின் நுழைவுசீட்டுக்கான முன்பதிவு BookMyShow இணைய தளத்தில் தொடங்கப்பட்டுள்ளது. பொது மக்களுக்கான  நுழைவுசீட்டு விலை ரூ 350 முதல் கிடைக்கும். மேலும் பிசினஸ் நேரத்தில் செல்வதற்கு ரூ 750 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வார இறுதி நாட்களுக்கு ரூ 475 ஆகவும் மற்றும் இறுதி நாளான பிப்ரவரி 14 அன்றுக்கு ரூ 450 ஆகவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

காலை 10 மணி முதல்  மதியம் 1 மணி வரை பிசினெஸ் நேரமாகவும் மதியம் 1 மணி முதல் மாலை 6 மணி வரை பொது நேரமாகவும் வரைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வார இறுதி நாட்களில் பிசினஸ் நேரம் கிடையாது முழுவதும் பொது நேரம் ஆகும். மேலும் 2018 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் டெல்லி வாகன கண்காட்சியின் தேதிகள் ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2018ம் ஆண்டு பிப்ரவரி 9ந் தேதி முதல் 14ம் தேதி வரை டெல்லி அருகே நொய்டாவில் உள்ள இந்தியா எக்ஸ்போ மார்ட்டில் வாகன கண்காட்சியும் பிப்ரவரி 8 முதல் 11 வரை டெல்லி பிரகதி மைதானத்தில்  வாகன உதிரிபாகங்களுக்கான கண்காட்சியும் நடைபெற உள்ளது.

நாளுக்கு நாள் இந்தியாவில் ஆட்டோமொபைல் துறை அசுர வளர்ச்சி அடைந்து வருவதால் இந்த வருடம் அதிக புதிய மாடல்களை எதிர்பார்க்கலாம். அதேபோல் டெல்லி வாகன கண்காட்சியில் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் வருடா வருடம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.