2018 ஆம் ஆண்டு டெல்லி வாகன கண்காட்சி நடைபெறும் தேதிகள் அறிவிப்பு

டெல்லியில் நடைபெறும் வாகன கண்காட்சி உலகளவில் பெயர்பெற்றது. இது இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும். தற்போது 2018 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் டெல்லி வாகன கண்காட்சியின் தேதிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

2018ம் ஆண்டு பிப்ரவரி 9ந் தேதி முதல் 14ம் தேதி வரை டெல்லி அருகே நொய்டாவில் உள்ள இந்தியா எக்ஸ்போ மார்ட்டில் வாகன கண்காட்சியும் பிப்ரவரி 8 முதல் 11 வரை டெல்லி பிரகதி மைதானத்தில்  வாகன உதிரிபாகங்களுக்கான கண்காட்சியும் நடைபெற உள்ளது.

நாளுக்கு நாள் இந்தியாவில் ஆட்டோமொபைல் துறை அசுர வளர்ச்சி அடைந்து வருவதால் இந்த வருடம் அதிக புதிய மாடல்களை எதிர்பார்க்கலாம். அதேபோல் டெல்லி வாகன கண்காட்சியில் பால்வையாளர்களின் எண்ணிக்கையும் வருடா வருடம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. டிக்கெட் கட்டணங்கள் குறித்த விபரங்கள் அறிவிக்கப்படவில்லை. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.