வெளிப்படுத்தப்பட்டது 2019 ஆம் ஆண்டு வோல்வோ S60

வோல்வோ நிறுவனம் புதிய தலைமுறை S60 செடான் மாடலை சௌத் கரோலினாவில் அமைக்கப்பட்ட புதிய தொழிற்சாலையின் துவக்க விழாவில் வெளிப்படுத்தியது. இந்த மாடல் தான் முதன் முதலில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த மாடல் டீசல் எஞ்சினில் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த மாடல் வோல்வோ நிறுவனத்தின் புதிய Scalable Product Architecture (SPA) பிளாட்பார்மில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் பார்ப்பதற்கு S90 மாடல் போன்ற தோற்றத்தை தருகிறது, மேலும் S90 மாடலின் வடிவமைப்புகள் இந்த மாடலில் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மற்ற வோல்வோ மாடல்கள் போலவே இந்த மாடலிலும் உபகரணங்கள், பாதுகாப்பு உபகரணங்கள் என ஏராளமான வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாடல் மொத்தம் நான்கு வித பெட்ரோல் எஞ்சின் தேர்வில் கிடைக்கும், அவற்றில் இரண்டு ஹைபிரிட் தொழில்நுட்பத்திலும் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

2.0-litre Turbocharged

  • Power: 250ps
  • Torque: 350Nm
  • Transmission: 8 Speed Automatic

2.0-litre Turbocharged and Supercharged

  • Power: 310ps
  • Torque: 400Nm
  • Transmission: 8 Speed Automatic

2.0-litre Turbocharged with Plug-in Hybrid

  • Power: 340ps
  • Transmission: 8 Speed Automatic

2.0-litre Turbocharged and Supercharged with Plug-in Hybrid

  • Power: 400ps
  • Transmission: 8 Speed Automatic

இந்த மாடல் இந்தியாவில் அடுத்த வருட ஆரம்பத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.