வெளியிடப்பட்டது டொயோடா எட்டியோஸ் கிராஸ் X எடிசன்

டொயோடா நிறுவனம் பண்டிகை காலத்தை முன்னிட்டு எட்டியோஸ் கிராஸ் X எடிசன் சிறப்பு பதிப்பு மாடலை வெளியிட்டுள்ளது. எட்டியோஸ் கிராஸ் X எடிசன் மாடலின் பெட்ரோல் மாடல் G வேரியன்ட்டின் அடிப்படையிலும் டீசல் மாடல் VD வேரியன்ட்டின் அடிப்படையிலும்  சில ஒப்பனை மாற்றங்கள் மற்றும் சில கூடுதல் உபகரணங்கள் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ளது. இதன் பெட்ரோல் மாடல் ரூ 6.78 லட்சம் விலையிலும் டீசல் மாடல் ரூ 8.22 லட்சம் விலையிலும் வெளியிடப்பட்டுள்ளது (இரண்டும் கொல்கத்தா ஷோரூம்). 

எட்டியோஸ் கிராஸ் X எடிசன் மாடலில் புதிய பாடி வண்ணத்திலான பாடி கிளாடிங்குகள், புதிய கருப்பு நிற கிரில்,  X எடிசன் பேட்ச், கருப்பு மற்றும் சில்வர் கலந்த உட்புறம், 6.8 இன்ச் இன்போடைன்மெண்ட் சிஸ்டம், புதிய கார்பன் பைபரால் ஆனா உட்புற பினிஷ் மற்றும் பின்புற கேமரா ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் புதிய குவார்ட்ஸ் பிரவுன் வண்ணத்தில் கிடைக்கும்.

எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை அதே 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.4 லிட்டர் டீசல்  என்ஜினில் தான் கிடைக்கும். இதன் பெட்ரோல் என்ஜின் 80 bhp (5600 rpm) திறனும் 104Nm (3100rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் மற்றும் டீசல் எஞ்சின் 68 bhp (3800 rpm) திறனும் 170Nm (1800-2400rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இந்த இரண்டு மாடலும் ஐந்து ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷனில் கிடைக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.