டொயோட்டா பிளாட்டினம் எட்டியோஸ் மாடலின் சிறப்பு பதிப்பு மாடல் வெளியிடப்பட்டது

டொயோட்டா நிறுவனம் பிளாட்டினம் எட்டியோஸ் மாடலின் சிறப்பு பதிப்பு மாடலை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இந்த சிறப்பு பதிப்பு மாடல் VX மற்றும் VXD வேரியன்ட்டின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்கள் முறையே ரூ 7.84 லட்சம் மற்றும் ரூ 8.94 லட்சம் டெல்லி ஷோரூம் விலையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மாடலில் வெறும் ஒப்பனை மாற்றங்கள் மட்டுமே கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ளது, மற்றபடி செயல்திறனில் எந்த மாற்றமும் இல்லை. 

இந்த சிறப்பு பதிப்பு மாடலின் வெளிப்புறத்தில் அதிக மாற்றங்கள் இல்லை. உட்புறத்தில் புதிய இரட்டை வண்ணை கவர், பிரவுன் வண்ண அலங்காரம்   மற்றும் புதிய 6.8-இன்ச் இன்போடைன்மெண்ட் சிஸ்டம் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் பிரவுன் மற்றும்  வெள்ளை என இரண்டு வண்ணங்களில் மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை, அதே 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.4 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் தான் கிடைக்கும். இதன் பெட்ரோல் என்ஜின் 90 bhp (5600 rpm) திறனும் 132Nm (3000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் மற்றும் டீசல் என்ஜினில் மாடல் 68 bhp (3800 rpm) திறனும் 170Nm (1800-2400rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது.  இந்த சிறப்பு பதிப்பு மாடல் சாதாரண மாடலை விட ரூ 2,000 அதிக விலை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.