C - HR காம்பேக்ட் SUV மாடலை 2016 ஆண்டுக்குள் வெளியிடும் டொயோடா

டொயோடா  நிறுவனம் கடந்த ஆண்டு பாரிசில் நடந்த வாகன கண்காட்சியில் C - HR காம்பேக்ட் SUV மாடலின் கான்செப்டை காட்சிக்கு வைத்திருந்தது. தற்போது இந்த C - HR காம்பேக்ட் SUV மாடலின் தயாநிருப்பு நிலை வடிவம் இந்த ஆண்டு நடைபெறும் டெட்ராய்ட் மோட்டார் கண்காட்சியில் வெளிப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் டொயோடா நிறுவனம் இந்த மாடலை 2016 ஆம் ஆண்டுக்குள் விற்பனைக்கு கொண்டுவர மும்மரமாக வேலை செய்வதாக ஆட்டோமொபைல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த மாடல் ஒரு ஹைப்ரிட் மாடலாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

முற்றிலும் புதிய மற்றும் கம்பீரமான தோற்றத்தில் இதன் கான்செப்ட் மாடல் வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்த அனைத்து அம்சங்களும் தயாரிப்பு நிலை மாடலில் இருக்குமா என்பது சந்தேகமே. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.