வின்டேஜ் மற்றும் கிளாசிக் கார்களுக்கான தடை நீக்கப்பட்டது

தேசிய பசுமை தீர்ப்பாயம் இந்தியாவில் பெருகி வரும் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த சில மாதங்களுக்கு முன்பு 15 வருடங்களுக்கு மேல் பழமையான கார்களை சாலையில் இயக்குவதற்கு தடை விதித்திருந்தது. இது வின்டேஜ் மற்றும் கிளாசிக் கார் பிரியர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த தடையை மறுபரிசீலனை செய்ய நீதி மான்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் இந்த தடை ஒரு சில மாநிலங்களில் மட்டுமே அமலில் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் வின்டேஜ் மற்றும் கிளாசிக் கார்களுக்கான தடையை நீக்கியுள்ளது. பராமரிப்பு,கண்காட்சியில் பங்கு பெறுதல் மற்றும் போட்டிகளில் கலந்து கொள்ளுதல் போன்ற காரணங்களுக்காக சாலைகளில் இயக்கலாம் என தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பாக நீதிமன்றம், கார் உரிமையாளர்களும் காற்று மாசுபாட்டை கருத்தில் கொண்டு கார்களை முறையாக பராமரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. இந்தியாவில் மட்டும் சுமார் 10,000 க்கும் மேற்பட்ட வின்டேஜ் மற்றும் கிளாசிக் கார்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.