வோல்க்ஸ்வேகன் மற்றும் LG நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய கனக்ட்டேட் கார் தொழில்நுட்பம்

வோல்க்ஸ்வேகன் மற்றும் LG  நிறுவனங்கள் இணைந்து ஒரு புதிய எதிர்கால ஸ்மார்ட் கார் தொழில்நுட்பத்தை தயாரிக்க உள்ளது. இதற்காக இவ்விரு நிறுவனங்களும் ஒரு ஒப்பந்தத்தை செய்துள்ளது. 

இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம் வீட்டில் இருந்தோ அல்லது வெளியில் இருந்தே ஒரு ஸ்மார்ட் சிஸ்டத்தின் மூலம் காரை கட்டுப்படுத்த முடியும். மேலும் காரின் அனைத்து சரியாக வேலை செய்கிறதா என்பதை உறுதி படுத்தவும் முடியும். ஒரு முளுமையான ஸ்மார்ட் காரை இந்நிறுவனங்கள் தயாரிக்க உள்ளது. 

வோல்க்ஸ்வேகன் நிறுவனம் ஏற்கனவே 2025 ஆம் ஆண்டுக்குள்  முழுவதும் எலெக்ட்ரிக்கால் இயங்கக்கூடிய 30 புதிய கார்களை வெளியிட இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும்  இந்த தொழில்நுட்பத்தின் அடிப்படையில் லாஸ் வேகஸில் நடைபெற்ற கன்சூமர் எலக்ட்ரானிக்ஸ் ஷோவில் பட் - e மைக்ரோ பஸ் கான்செப்டை அறிமுகம் செய்ததும் குறிப்பிடத்தக்கது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.