போலோ மற்றும் வென்டோ மாடல்களில் சிறப்பு பதிப்புகளை வெளியிட்டது வோல்க்ஸ்வேகன்

ஐரோப்பாவை சேர்ந்த  வோல்க்ஸ்வேகன் நிறுவனம் போலோ செலக்ட் மற்றும் வென்டோ செலஸ்ட் என இரண்டு சிறப்பு பதிப்பு மாடல்களை வெளியிட்டுள்ளது. இந்த இரண்டு சிறப்பு பதிப்பு மாடல்களும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே கிடைக்கும். இந்த சிறப்பு பதிப்பு மாடல் இரண்டு கார்களின் மேனுவல் ட்ரான்ஸ்மிசன் கொண்ட ஹைலைன் வேரியன்டிலும் மற்றும் வென்டோ காரின் DSG எனும் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ் மிசன் கொண்ட  ஹைலைன் வேரியன்டிலும் மட்டுமே கிடைக்கும். 

இந்த இரண்டு மாடல்களிலும் வெளிப்புறத்தில் கூடுதலாக கருப்பு நிற பக்கவாட்டு மோல்டிங், கார்பன் பினிஷ் கொண்ட பக்கவாட்டு கண்ணாடி மற்றும் கருப்பு நிற மேற்கூரை ஆகியவை கிடைக்கும். மேலும் இந்த இரண்டு மாடல்களிலும் ABS  மற்றும் இரண்டு காற்றுப்பை நிரந்தர அம்சமாக கிடைக்கும்.

உட்புறத்தில் போலோ செலக்ட் மாடலில் ஸ்க்ராட்ச் ரெசிஸ்டன்ஸ் டேஸ் போர்டும் போலோ செலக்ட் கார்பன் பினிஷ் கொண்ட சென்டர் கன்சோலும்  கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல்களில் நேவிகேசன் கொண்ட மியூசிக் சிஸ்டம், ஸ்டீரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு மற்றும் வோல்க்ஸ்வேகன் லோகோ பொறிக்கப்பட்ட இருக்கை ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாடல்கள் இந்தியாவில் உள்ள அனைத்து வோல்க்ஸ்வேகன் ஷோரூம்களிலும் கிடைக்கும். போலோ செலக்ட் மற்றும் வென்டோ செலஸ்ட் மாடல்களில் உள்ள சிறப்பு வசதிகள்:

To see Volkswagen model click here

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.