புதிய 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினில் கிடைக்கும் வோல்க்ஸ்வேகன் போலோ

வோல்க்ஸ்வேகன் நிறுவனம் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் போலோ மாடலை வெளியிட்டுள்ளது. இந்த புதிய 1.0 லிட்டர் MPI பெட்ரோல் எஞ்சின் முந்தய 1.2 லிட்டர் MPI எஞ்சினுக்கு மாற்றாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் கூடிய விரைவில் அமியோ காம்பேக்ட் செடான் மாடலிலும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த புதிய 1.0 லிட்டர் MPI பெட்ரோல் என்ஜின் 76Bhp திறனையும் 95Nm இழுவைத்திறனையும் வழங்கும். மேலும் இந்த என்ஜின் ஐந்து ஸ்பீட் மேனுவல் கியர் பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் 18.78 Kmpl மைலேஜ் தரும் ARAI சான்றளித்துள்ளது. இந்த புதிய 1.0 லிட்டர் MPI பெட்ரோல் என்ஜின் முந்தய எஞ்சினை விட 1Bhp அதிக திறனும் 15Nm குறைவான இழுவைத்திறனும் கொண்டது. குறிப்பாக இந்த மாடல் தோராயமாக 2 Kmpl அதிக மைலேஜ் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த புதிய போலோ மாடல்களின் விலையில் எந்த மாற்றமும் இல்லை அதே விலையில் தான் கிடைக்கிறது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.