வெளிப்படுத்தப்பட்டது வோல்க்ஸ்வேகன் T-ராக் காம்பேக்ட் கிராஸ் ஓவர்

வோல்க்ஸ்வேகன் நிறுவனம் இறுதியாக T-ராக் காம்பேக்ட் கிராஸ் ஓவர் மாடலை இத்தாலியாவில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் வெளிப்படுத்தியுள்ளது. இந்த மாடல்  வோல்க்ஸ்வேகன் நிறுவனத்தின்  MQB பிளாட்பார்மில் தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. படங்கள் மற்றும் சில விவரங்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

இந்த மாடலில் டைகுன் மாடலின் வடிவைப்புகள் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாடலின் வெளிப்புறத்தில் பெரிய அறுங்கோண முகப்பு கிரில், LED முகப்பு மற்றும் பின்புற விளக்குகள், அடிப்புறத்தில் பிளாஸ்டிக் கிளாடிங்குகள் ஆகியவை கொடுக்கப்பட்டு ஒரு முழுமையான கிராஸ் ஓவர் போன்ற தோற்றத்தை தருமளவு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் 4234 மில்லி மீட்டர் நீளமும், 1819 மில்லி மீட்டர் அகலமும், 1573 மில்லி மீட்டர் உயரமும் மற்றும் 2603 மில்லி மீட்டர் வீல் பேசும் கொண்டது. 

உட்புறம் புதிய ஆறாம் தலைமுறை போலோ மாடல் போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் மூன்று வித பெட்ரோல் மற்றும் இரண்டு வித டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் உலகளவில் கிடைக்கும். மேலும் இந்த மாடல் ஆறு ஸ்பீட் மேனுவல் மற்றும் ஏழு ஸ்பீட் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷனுடனும் நான்கு வீல் டிரைவ் சிஸ்டம் த்துடனும் கிடைக்கும். இந்த மாடல் இந்தியாவில் எப்போது வெளியிடப்படும் என்பது பற்றி எந்த ஒரு தெளிவான தகவலும் இல்லை. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.