வோல்க்ஸ் வேகன் நிறுவனத்தின் புதிய காம்பேக்ட் செடான் அமியோ

வோல்க்ஸ் வேகன் நிறுவனம் 4 மீட்டருக்கு குறைவான நீளம் கொண்ட அமியோ  எனும் புதிய காம்பேக்ட் செடான் மாடல் வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த மாடல் போலோ மாடலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த மாடல் மிகச்சிறந்த பாதுகாப்பு அம்சங்களையும் நிறைந்த தரம் கொண்டதாகவும் இருக்கும் என தெரிவித்துள்ளது. இந்த மாடல் போலோ மாடலில் உள்ள அதே என்ஜினில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 வோல்க்ஸ் வேகன் நிறுவனம் இந்த புதிய காம்பேக்ட் செடான் மாடல் 2016 டெல்லி வாகன கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்படும் எனவும் அறிவித்துள்ளது. மேலும் இந்த மாடல் மாருதி சுசுகி டிசைர், ஹுண்டாய் எக்ஸ்சென்ட், ஃபோர்டு  ஃபிகோ மற்றும் டாட்டா செஸ்ட் மாடல்களுக்கு போட்டியாக நிலைநிறுத்தப்படும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.