ரூ. 38.9 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது வால்வோ S60 கிராஸ் கன்ட்ரி செடான்

வால்வோ நிறுவனம் ரூ. 38.9 லட்சம் மும்பை ஷோ ரூம் ஆரம்ப விலையில் S60 கிராஸ் கன்ட்ரி செடான் மாடலை இந்தியாவில் வெளியிட்டது. இந்த மாடல் 2015 டெட்ராய்ட்  மோட்டார் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் இந்த மாடல்  S60  செடான் மாடலில் சில மாற்றங்கள் செய்து உருவாக்கப்பட்டுள்ளது.

ஸ்போர்டியாக தெரிவதற்காக  இந்த மாடலில் புதிய பிளாஸ்டிக் கிலாடிங்குகள் கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் கிரௌண்ட் கிளியரன்ஸ் (தரை இடைவெளி) அதிகரிக்கப்பட்டுள்ளது. சாதாரண S60  செடான் மாடலை விட 65 மில்லி மீட்டர் அதிக கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது இந்த மாடல். குறிப்பாக 200 மிமீ கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது. இதனால் அணைத்து விதமான சாலைகளிலும் சிறப்பான ஒட்டுதல் அனுபவத்தை தரும்.  ப்ரீமியம் கார் என்பதால் தானியங்கி குளிரூட்டி மற்றும் பின்புற கேமரா போன்ற அனைத்து சொகுசு  வசதிகளும் உள்ளது.

இந்த மாடல் இந்தியாவில்  2.4 லிட்டர் டீசல் என்ஜினில் மட்டுமே கிடைக்கும். இந்த என்ஜின் 190 bhp திறனையும் 420 Nm இழுவைதிறனையும் வழங்கும்.  மேலும் இந்த மாடல் 6 ஸ்பீட் ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் மற்றும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்துடன் மட்டுமே கிடைக்கும். இது ஒரு செடான்   மாடல் ஆனால் SUV  போன்று கிரௌண்ட் கிளியரன்ஸ் அதிகமாக இருப்பதால் வித்தியாசமான ஒட்டுதல் அனுபவத்தை தரும் என்பதில் மாற்றம் இருக்காது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.