ரூ.53.5 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது வால்வோ S90

வால்வோ நிறுவனம் S90 மாடலை ரூ.53.5 லட்சம் டெல்லி ஷோ ரூம் ஆரம்ப விலையில் வெளியிட்டுள்ளது. இது சமீபத்தில் வெளியிடப்பட்ட XC90 மாடலின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட செடான் மாடல் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அடுத்த மாதம் முதல் டெலிவரி தொடங்கப்படும்.

இந்த மாடலில்  மற்ற வால்வோ மாடல்களில் கிடைக்கும் பாதுகாப்பு வசதிகள் சொகுசு வசதிகள் என அனைத்தும் கிடைக்கும். மேலும் இந்த மாடலில் செமி அட்டானமஸ் டிரைவ் பைலட் இண்டெலிஜெண்ட் சேப்டி அசிஸ்ட்  ஆகியவையும் கிடைக்கும். இந்த மாடலில் 2.0 லிட்டர் டர்போ சார்ஜ் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது 190 Bhp  திறனையும் 400 Nm  இழுவைதிறனையும் வழங்கும்.

இந்த மாடல் ஆடி A6, BMW  5 சீரீஸ் மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ்  E - கிளாஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.