ரூ.1.25 கோடி விலையில் வெளியிடப்பட்டது வோல்வோ XC90 எக்ஸலென்ஸ் பிளக் இன் ஹைபிரிட் SUV

வோல்வோ நிறுவனம் ரூ.1.25 கோடி டெல்லி ஷோ ரூம்  விலையில் இந்தியாவில் XC90  எக்ஸலென்ஸ் பிளக் இன் ஹைபிரிட் SUV  மாடலை வெளியிட உள்ளது. ஏற்கனவே விற்பனையில் இருக்கும் XC90 மாடலுக்கும்  இந்த மாடலுக்கும்  எஞ்சினில் மட்டும் தான் மற்றம் வேறு எந்த மாற்றமும் இல்லை.

இந்த புதிய மாடலில் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் எலெக்ட்ரிக் மோட்டோரும் பேட்டரியும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை பிளக் இன் மூலம் சார்ஜ் செய்து கொள்ளலாம். மொத்தமாக இந்த மாடல் 407 Bhp  திறனையும் 640 Nm  இழுவைத்திறனையும் வழங்கும். மேலும் இந்த மாடலில் 8 ஸ்பீட் கொண்ட கியர்ட்ரானிக் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் பியூர், ஹைபிரிட் மற்றும் பவர் என மூன்று டிரைவிங் மோடுகளையும்  கொண்டுள்ளது.

வெளிப்புறம் மற்றும் உட்புற வடிவமைப்பு, சொகுசு உபகரணங்கள் ஆகியவற்றில் மாற்றங்கள் இல்லை. தற்போது விற்பனையில் இருக்கும் மாடலில் உள்ள அனைத்தும் இதிலும் உள்ளது. உட்புறம் மிகவும் சொகுசான அனுபவத்தை தருமளவு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் நான்கு பேர் மட்டுமே அமர முடியும். இந்த செக்மென்ட்டில் வேறு எந்த மாடலும் பிளக் இன் ஹைபிரிட் தொழில்நுட்பத்துடன் கிடைப்பது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.