40 சீரிஸில் இரண்டு புதிய கான்செப்டுகளை அறிமுகப்படுத்தியது வோல்வோ

சுவீடனை சேர்ந்த வோல்வோ நிறுவனம் தனது தலைமையகத்தில் 40.1 (SUV ) மற்றும் 40.2 (செடான்) எனும் இரண்டு கான்செப்டுகளை அறிமுகப்படுத்தியது. இந்த இரண்டு மாடலுமே வோல்வோ நிறுவனத்தின் நுழைவு நிலை மாடலாக இருக்கும்.

40.1எனும் கான்செப்ட் மாடல் ஒரு காம்பேக்ட் கிராஸ் ஓவர் மாடல் ஆகும். இது XC40 எனும் பெயரால் அழைக்கப்படும். 40.2 எனும் கான்செப்ட் மாடல் ஒரு செடான்  மாடல் ஆகும். இது S40 எனும் பெயரால் அழைக்கப்படும். இந்த இரண்டு மாடலுமே வோலோவோ நிறுவனத்தின் CMA (Compact Modular Architecture) பிலாட்பார்மின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இந்த மாடல்களின் படங்கள் மாட்டும் தான் வெளியிடப்பட்டது. மற்றபடி என்ஜின் தொடர்பான விவரங்கள் வெளியிடப்படவில்லை. எனினும் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு என்ஜினிலும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த மாடல் ஐரோப்பாவில் 2017 ஆம் ஆண்டு மத்தியிலும் இந்தியாவில் 2018 ஆம் அன்டிளும்வேளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.