வெளிப்படுத்தப்பட்டது உலகிலேயே மிக வேகமான ஆக்சிலரேஷன் கொண்ட டெஸ்லா ரோட்ஸ்டெர்

டெஸ்லா நிறுவனம் மேம்படுத்தப்பட்ட புதிய எலெக்ட்ரிக் ரோட்ஸ்டெர் மாடலை வெளிப்படுத்தியுள்ளது. இந்த மாடல் தான் இதுவரை உலகிலேயே மிக வேகமான ஆக்சிலரேஷன் கொண்ட தயாரிப்பு நிலை மாடல் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த மாடல் 100 கிலோ மீட்டர் வேகத்தை வெறும் 1.9 வினாடிகளில் கடந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாடலில் உள்ள மின் மோட்டார்கள் அனைத்தும் இணைந்து அதிகபட்சமாக 10,000 Nm இழுவைத்திறனை வழங்கும். மேலும் இந்த மாடல் 200kWh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இவ்வளவு அதிக திறன் கொண்ட பேட்டரி ஒரு காரில் பொறுத்தப்படுவதும் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பேட்டரியை ஒரு முறை சார்ஜ் செய்தால் 1000 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்கும். இந்த மாடலின் பின்புற அச்சில் இரண்டு மின் மோட்டர்களும் முன்புற அச்சில் ஒரு மின் மோட்டாரும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் அதிகபட்சமாக மணிக்கு 400 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும் வல்லமை கொண்டது.

இந்த மாடல் 2020 ஆம் ஆண்டு தான் வெளியிடப்படும். இருப்பினும் இதன் விலை விவரங்களை தற்போதே வெளியிட்டுள்ளது டெஸ்லா நிறுவனம். இதன் ஆரம்ப நிலை மாடல் 200,000 அமெரிக்க டாலர் மதிப்பில் வெளியிடப்படும். இந்த மாடலை முன்பதிவு செய்ய விரும்புவோர் 50,000 அமெரிக்க டாலர் களை முன்பணமாக செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.