S201 தயாரிப்பு நிலை மாடலின் பெயர் மற்றும் படங்களை வெளியிட்டது மஹிந்திரா

மஹிந்திரா நிறுவனம் S201 குறியீட்டு பெயரில் சோதனை செய்து வந்த நான்கு மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட மாலின் பெயரை XUV300 என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இதன் உட்புறம் மற்றும் வெளிப்புறம் தொடர்பான படங்களையும் முதன் முறையாக வெளியிட்டுள்ளது மஹிந்திரா நிறுவனம். இந்த மாடல் சாங்யாங் டிவோலி மாடலின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  இந்த மாடல் அடுத்த வருட ஆரம்பத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மஹிந்திரா நிறுவனம் TUV300 மற்றும் நுவோ ஸ்போர்ட் மாடல்களை அடுத்து வெளியிடும் மூன்றாவது நான்கு மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட SUV மாடல் ஆகும். இந்த மாடல் ஒரு சிறப்பான SUV போன்ற தோற்றத்தை தருகிறது. மேலும் இந்த மாடலில் ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள், பகல் நேரத்தில் ஒளிரும் LED விளக்குகள், ABS மற்றும் EBD என ஏராளமான வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. மஹிந்திரா நிறுவனம் சாங்யாங் டிவோலி மாடலின் வடிவமைப்பை அப்படியே பயன்படுத்தாமல் நிறைய மாற்றங்களை செய்துள்ளது. மேலும் XUV500 மாடல் போல சிறுத்தையை அடிப்படியாக கொண்டு சில மாற்றங்களை வெளிப்புறத்தில் செய்துள்ளது. உட்புறத்தில் எந்த மாற்றமும் இல்லை, சாங்யாங் டிவோலி மாடலின் வடிவமைப்பு அப்படியே பயன்படுத்தப்பட்டுள்ளது.

எஞ்சின் தொடர்பான விவரங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை, எனினும் இந்த மாடல் மராஸோ மாடலில் உள்ள புதிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சினில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எஞ்சின் 121bhp திறனையும் மற்றும் 300Nm இழுவைத்திறனையும் வழங்கும். மேலும் இந்த மாடல் பெட்ரோல் எஞ்சின் தேர்விலும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல் மாருதி சுசூகி விட்டாரா ப்ரீஸா, போர்டு ஈகோ ஸ்போர்ட், ஹோண்டா WR-V மற்றும் டாடா நெக்ஸன் போன்ற நான்கு மீட்டருக்கும் குறைவான SUV மாடல்களுக்கு கடும் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.