மகிந்திரா மராஸோ

9,99,000 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:-
  • Cargo Volume:-
  • Fuel Tank Capacity:45 Litres

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Diesel
M2 (7-seater) - டீசல்

D15 1.5 Litre, 1497 CC, 121bhp, 300Nm, 6 Speed Manual

17.6 kmpl 9,99,000 11,88,810
M4 (7-seater) - டீசல்

D15 1.5 Litre, 1497 CC, 121bhp, 300Nm, 6 Speed Manual

17.6 kmpl 10,95,000 13,03,050
M6 (7-seater) - டீசல்

D15 1.5 Litre, 1497 CC, 121bhp, 300Nm, 6 Speed Manual

17.6 kmpl 12,40,000 14,75,600
M8 (7-seater) - டீசல்

D15 1.5 Litre, 1497 CC, 121bhp, 300Nm, 6 Speed Manual

17.6 kmpl 13,90,000 16,54,100

மேலோட்டம்

மராஸோ மாடல் முற்றிலும் புதிய பிளாட்பார்மில் தயாரிக்கப்பட்டுள்ளதாக மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த மடலில் புதிய எஞ்சின், புதிய சரௌண்ட் கூல் சிஸ்டம் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. மஹிந்திராவின் வட அமெரிக்கா டிசைன் சென்டரில் வடிவமைக்கப்பட்ட முதல் மாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த மாடல் சுறாவை (Shark) அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதே போல XUV500 மாடலை சிறுத்தையின் வடிவமைப்பை அடிப்படையாக கொண்டும் TUV300 மாடலை ராணுவ டேங்கை அடிப்படையாக கொண்டும் மஹிந்திரா நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதன் 8 இருக்கை கொண்ட மாடல் ஏழு இருக்கை கொண்ட மாடலை விட ரூ 5000 விலை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. 

செயல் திறன்

இந்த மாடல் புத்தம் புதிய 1.5 லிட்டர் நான்கு சிலிண்டர் டீசல் எஞ்சினில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 121bhp திறனையும் மற்றும் 300Nm இழுவைத்திறனையும் வழங்கும். இந்த திறன் ஆறு ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் சிஸ்டம் மூலம் முன்புற வீலுக்கு கடத்தப்படுகிறது. மேலும் இந்த மாடல் 17.6kmpl மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது.

வெளிப்புறத் தோற்றம்

இந்த மாடலும் மற்ற மஹிந்திரா மாடல்கள் போலவே பாடி-ஆன்-பிரேம் எனும் கட்டமைப்பில் தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் சிறப்பான வெளிப்புற வடிவமைப்பு கொண்டதாகவும், உட்புறத்தில் அதிக இடவசதி கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் மெரூன், பர்பிள், வெள்ளை, சில்வர், கருப்பு மற்றும் ஆக்குவா மரைன் என ஆறு வண்ணங்களில் கிடைக்கும்.

உட்புறத் தோற்றம்

இந்த மாடலில் ஆட்டோ கிளைமேட் கண்ட்ரோல், டச் ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட் சிஸ்டம், ஸ்டீரிங் ஆடியோ கண்ட்ரோல் என ஏராளமான வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளது. இரட்டை காற்றுப்பை மாற்றம் ABS அணைத்து வேரியன்ட்டுகளிலும் நிரந்தர அம்சமாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் ஏழு மற்றும் எட்டு இருக்கை கொண்ட வடிவமைப்பில் கிடைக்கும்.

உபகரணங்கள்

டாப் வேரியண்டில் கிடைக்கும்  உபகரணங்கள். 
1.குளிரூட்டி 
2.பவர் விண்டோ 
3.பனி விளக்குகள்
4. கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள்
5. பவர் ஸ்டீரிங் 
6.கீலெஸ் என்ட்ரி
7. ஆடியோ சிஸ்டம்
8.ஆன்டி லாக் ப்ரேக்
9.காற்றுப்பை
10.பின் நகர்வு பார்கிங் சென்சர்
11. ஸ்டீரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு 

வீடியோ

விவரக்குறிப்பு

SPECIFICATION மகிந்திரா மராஸோ
Length 4585 mm
Width 1866 mm
Height 1774 mm
Wheel Base 2760 mm
Ground Clearance -
Steering type -
Turning Radius 5.25 m
Kerb Weight -
Seating 7 and 8 Seat
Fuel Tank Capacity 45 Litres
Emission BSIV
Suspension Type System Front Double Wishbone
Suspension System Rear Twist Beam
Tyre Size 215 65 R16 & 215 60 R17 (M8)
Tubeless Tyres Yes
Brake Front Disc
Brake Rear Disc
Cargo Volume -

என்ஜின்

;
ENGINE Diesel
Engine D15 1.5 Litre
Engine Displacement 1497 CC
Maximum Power 90.2 kW (121 Hp)@3500RPM
Maximum Torque 300Nm @ 1750-2500RPM
Fuel Diesel
Top Speed -
Acceleration -
No. of Cylinders 4
Valves Per Cylinder 2
Compression Ratio -
Fuel Supply System -
Drive Type Front Wheel Drive
Turbo Charger Yes
Super Charger No
Gear box 6 Speed Manual