மகிந்திரா e2o பிளஸ்

8,45,340 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:170 mm
  • Cargo Volume:135 ltr
  • Fuel Tank Capacity:-

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Electrical
P4

Electric, 19kw, 70Nm, Automatic

110 km 8,45,340 9,72,141
P6

Electric, 19kw, 70Nm, Automatic

110 km 9,40,499 10,81,573
P8

Electric, 30kw, 91Nm, Automatic

140 km 12,58,444 14,47,210

மேலோட்டம்

2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மகிந்திரா  நிறுவனத்தால் புத்தம் புதிய மேம்படுத்தப்பட்ட e2o பிளஸ்எ லக்ட்ரிக்  மாடல் வெளியிடப்பட்டது. 

எலக்ட்ரிக் என்ஜினில் மட்டும் இந்த மாடல்  கிடைக்கிறது. இந்த மாடல் 3 வேரியண்டுகளில் மற்றும் வெள்ளை, சில்வர், ப்ளூ  மற்றும் சிவப்பு ஆகிய  4 வண்ணங்களில் கிடைகிறது.

இது ஒரு முழுமையான எலக்ட்ரிக் மாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

செயல் திறன்

இதன் P4 மற்றும் P6 மாடலில்   19 Kw (3500 rpm)  திறனும் 70Nm (1000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்ட  எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 48V கொண்ட லித்தியம்-அயர்ன் பேட்டரி இந்த மாடலில் பொருத்தப்பட்டுள்ளது.  இந்த மாடல் ஒரு முழுமையான சார்ஜுக்கு 110 கிலோ மீட்டர் வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் P8 மாடலில்   30 Kw (3500 rpm)  திறனும் 91Nm (2000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்ட  எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 69V கொண்ட லித்தியம்-அயர்ன் பேட்டரி இந்த மாடலில் பொருத்தப்பட்டுள்ளது.  இந்த மாடல் ஒரு முழுமையான சார்ஜுக்கு 140 கிலோ மீட்டர் வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த  கார்  60 கிலோமீட்டர் வேகத்தை 9.5 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும் இந்த  கார்  அதிகபட்சமாக மணிக்கு 85 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும்.

இந்த மாடலின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 1.15 மணி நேரம் தேவைப்படும்.

வெளிப்புறத் தோற்றம்

இந்த மாடல் வெள்ளை, சில்வர், ப்ளூ  மற்றும் சிவப்பு ஆகிய  4  வண்ணங்களில் கிடைகிறது.   
முன்புறத்தில் கருப்பு வண்ண  கிரில்   கொடுக்கப்பட்டுள்ளது. 

வீல் கவர், கருப்பு வண்ண மேற்கூரை, ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள்,  கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் மற்றும்   கைபிடிகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

இது 3590 மில்லி மீட்டர் நீளமும்  1575 மில்லி மீட்டர் அகலமும் 1585 மில்லி மீட்டர் உயரமும் கொண்டது மற்றும் 170 மில்லி மீட்டர் கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது.

உட்புறத் தோற்றம்

உட்புறம்  கருப்பு மற்றும் பீஜ் வண்ண கலவையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
 
 பவர் விண்டோ, ஸ்டீரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு, டச் ஸ்க்ரீன் ஆடியோ சிஸ்டம்,  ஆகியவையும் இந்த மாடலில்  கிடைக்கும் .

குளிரூட்டி மற்றும் பவர் ஸ்டீரிங்   ஆகியவையும் இந்த மாடலில்  கிடைக்கும் .

இந்த கரை உங்கள் மொபைல் அப்ளிகேசன் மூலமாகவும் கட்டுப்படுத்த  முடியும்.

உபகரணங்கள்

டாப் வேரியண்டில் கிடைக்கும்  உபகரணங்கள். 
1.குளிரூட்டி 
2.பவர் விண்டோ 
3.கார்  வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் 
4. பவர் ஸ்டீரிங் 
5.கீலெஸ் என்ட்ரி
6. ஆடியோ சிஸ்டம்
7.ஸ்டீரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு
8.ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள்

வீடியோ

விவரக்குறிப்பு

SPECIFICATION மகிந்திரா e2o பிளஸ்
Length 3590 mm
Width 1575 mm
Height 1585 mm
Wheel Base 2258 mm
Ground Clearance 170 mm
Steering type Electric
Turning Radius 4.35 m
Kerb Weight 990 Kg
Seating 4
Fuel Tank Capacity -
Emission Zero emmission
Suspension Type System Front Mac Pherson Strut Type Independent Suspension With Coaxial Spring
Suspension System Rear Twin Pivot Trailing Arm With Coaxial Spring Damper
Tyre Size 165/60/R14 - 79T
Tubeless Tyres Yes
Brake Front Disc
Brake Rear Drum
Cargo Volume 135 ltr

என்ஜின்

;
ENGINE Elctrical Low power
Engine Electric motor
Engine Displacement -
Maximum Power 19 KW @ 3500 rpm
Maximum Torque 70 N-m @ (100 rpm)
Fuel 48V maintenance-free Lithium-ion
Top Speed 80 kmph
Acceleration 14.1 seconds
No. of Cylinders -
Valves Per Cylinder -
Compression Ratio -
Fuel Supply System -
Drive Type FWD
Turbo Charger Not Applicable
Super Charger Not Applicable
Gear box Automatic
;
ENGINE Electrical
Engine Electric Motor
Engine Displacement -
Maximum Power 30 kW @ 3500 rpm
Maximum Torque 91Nm @ 2000 rpm
Fuel -
Top Speed 85 kmph
Acceleration 9.5 sec
No. of Cylinders -
Valves Per Cylinder -
Compression Ratio -
Fuel Supply System -
Drive Type FWD
Turbo Charger Not Applicable
Super Charger Not Applicable
Gear box Automatic