ஸ்கோடா கோடியாக்

34,49,501 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:188mm
  • Cargo Volume:270liter
  • Fuel Tank Capacity:63liter

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Diesel
Kodiaq 2.0 TDI AT - டீசல்

2.0 TDI, 1968 cc, 150 Bhp, 340 Nm, Automatic, AWD

16.25 Kmpl 34,49,501 41,39,401

மேலோட்டம்

இறுதியாக ஸ்கோடா நிறுவனம் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட கோடியாக் SUV மாடலை இந்தியாவில் அக்டோபர் 4 ஆம் தேதி 2017 ஆம் ஆண்டு வெளியிட்டது. இந்த மாடல் ஸ்டைல் எனும் ஒரே ஒரு வேரியன்ட்டில்  மட்டும் கிடைக்கும். மேலும் இது ஸ்கோடா நிறுவனத்தின் முதல் ஏழு பேர் அமரும் வசதி கொண்ட SUV மாடல் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் கான்செப்ட் மாடல் 2016 ஆம் ஆண்டு ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது விசன் S கான்செப்டின் தயாரிப்பு நிலை மாடல் ஆகும். அலாஸ்காவில் வாழும் கோடியாக் எனும் கரடியின் பெயரிலிருந்தும் மேலும் கோடியாக் எனும் தீவின் பெயரிலிருந்தும் இப்பெயர் பெறப்பட்டுள்ளதாக ஸ்கோடா நிறுவனம் ஏற்கனவே அறிவித்துள்ளது.

செயல் திறன்

இந்த மாடலில் 2.0 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 150Bhp திறனையும் 340Nm இழுவைத்திறனையும் வழங்கும். இந்த திறன் ஏழு ஸ்பீட் கொண்ட ஆட்டோமேட்டிக் DSG கியர் பாக்ஸ் மற்றும் AWD சிஸ்டம் மூலம் நான்கு வீலுக்கும் கடத்தப்படுகிறது. மேலும் இந்த மாடலில் நார்மல், ஈக்கோ, ஸ்போர்ட் மற்றும் ஸ்னோ என நான்கு வித டிரைவ் மோடுகளும் கொடுக்கப்பட்டுள்ளது. 

வெளிப்புறத் தோற்றம்

முகப்பு கிரில் மற்றும் வடிவமைப்பு என ஸ்கோடா மாடலின் பாரம்பரிய டிசைன் தத்பரியத்தில் அடுத்த தலைமுறைக்கு ஏற்ற அம்சங்களை புகுத்தி இந்த மாடலை வடிவமைத்துள்ளது ஸ்கோடா நிறுவனம். இது பார்பதற்கு முழுமையான மற்றும் பெரிய SUV போல் தோற்றத்தை தருகிறது. மேலும் இந்த மாடல் EURO NCAP சிதைவு சோதனையில் ஐந்து ஸ்டார் தர மதிப்பீட்டை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த மாடல் 4,697 மில்லி மீட்டர் நீளமும், 1,882 மில்லி மீட்டர் அகலமும், 1,676 மில்லி மீட்டர் உயரமும் மற்றும் 2,791 மில்லி மீட்டர் வீல் பேசும் கொண்டது. மேலும் இந்த மாடல் 188 மில்லி மீட்டர் தரை இடைவெளியும் கொண்டது. 

உட்புறத் தோற்றம்

உட்புறத்தில் சூப்பர்ப் மாடலின் சில பாகங்கள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் அனைத்து விதமான சொகுசு உபகரணங்களும் கொண்ட மாடலாக இது இருக்கும். மேலும் இந்த மாடலில் ஒன்பது காற்றுப்பை, எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ப்லைன்ட் ஸ்பாட் டிடெக்சன் என ஏராளமான பாதுகாப்பு வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளது. 

உபகரணங்கள்

டாப் வேரியண்டில் கிடைக்கும்  உபகரணங்கள். 
1.குளிரூட்டி 
2.பவர் விண்டோ 
3.டர்ன் இன்டிகேடருடன் கூடிய கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள்
4. பவர் ஸ்டீரிங் 
5.பனி விளக்குகள்
6.கீலெஸ் என்ட்ரி
7. ஆடியோ சிஸ்டம்
8.ஆன்டி லாக் ப்ரேக்
9.காற்றுப்பை
10.ஸ்டீரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு
11.பின் நகர்வு பார்கிங் சென்சர்
12.பின் நகர்வு பார்கிங் கேமரா 
13.குரூஸ் கன்ட்ரோல்
14.தானியங்கி குளிரூட்டி
15. ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள்
16.ஸ்டார்ட் /ஸ்டாப் பொத்தான் 
17.பகல் நேரத்தில் ஒளிரும் LED விளக்குகள்
18.சன் ரூப்

படங்கள்

வீடியோ

விவரக்குறிப்பு

SPECIFICATION ஸ்கோடா கோடியாக்
Length 4,697mm
Width 1,882mm
Height 1,665mm
Wheel Base 2,791mm
Ground Clearance 188mm
Steering type Power assisted - Electric
Turning Radius 6.1m
Kerb Weight 1,799Kg
Seating 7
Fuel Tank Capacity 63liter
Emission BSIV
Suspension Type System Front McPherson suspension with lower triangular links and torsion stabiliser
Suspension System Rear Multi-element axle, with longitudinal and transverse links, with torsion stabiliser
Tyre Size 235/55 R18 100V / 145/85 R18, 103 M
Tubeless Tyres Yes
Brake Front Disc with inner cooling and with single-piston floating calliper
Brake Rear Disc Brakes
Cargo Volume 270liter

என்ஜின்

;
ENGINE Diesel
Engine Turbocharged diesel engine with common rail system
Engine Displacement 1968cc
Maximum Power 110(150)[kW(PS)/3,500-4,000rpm
Maximum Torque 340Nm/1,750–3,000rpm
Fuel Diesel
Top Speed 175-180Kmph
Acceleration 5-7 seconds
No. of Cylinders 4
Valves Per Cylinder 2
Compression Ratio -
Fuel Supply System -
Drive Type FWD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 7 Speed Automatic DSG