டொயோடா LC ப்ராடோ

90,28,005 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:220 mm
  • Cargo Volume:-
  • Fuel Tank Capacity:87 Ltr

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Diesel
VX - L - டீசல்

D-4D, 2982cc, 173bhp, 410Nm, Automatic

11kmpl 90,28,005 1,07,43,326

மேலோட்டம்

2013 ஆம் ஆண்டு  டொயோடா   நிறுவனத்தால் மேம்படுத்தப்பட்ட லேன்ட் க்ரூசர் ப்ராடோ   மாடல்  வெளியிடப்பட்டது. 

டீசல் என்ஜினில் மட்டும் இந்த மாடல்  கிடைக்கிறது. இந்த மாடல் ஒரே ஒரு  வேரியண்டில் மற்றும் வெள்ளை, சில்வர்,  ப்ளூ, கருப்பு   மற்றும் கிரே உட்பட 5 வண்ணங்களில் கிடைகிறது.

செயல் திறன்

இந்த மாடல் 4 சிலிண்டர் மற்றும் 16 வால்வ் கொண்ட 3 லிட்டர் டீசல் என்ஜினில் மட்டும்  கிடைக்கும்.

இதன் டீசல் என்ஜின் 2982CC கொள்ளளவு கொண்டது.

இதன்  டீசல் என்ஜின் 173 bhp (3400 rpm) திறனும் 410Nm (1600-2800rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது.இந்த  மாடல் 11 kmpl மைலேஜ்  தரும் என ARAI சான்றளித்துள்ளது.   

இந்த கார் 100 கிலோமீட்டர் வேகத்தை 12 முதல் 13  வினாடிகளில்  கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும்  இந்த கார் அதிக பட்சமாக மணிக்கு  170 முதல் 180 கிலோமீட்டர்  வேகம் வரை செல்லும்.

இந்த மாடலில் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிசனும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் கிடைக்கிறது.

வெளிப்புறத் தோற்றம்

இந்த மாடல்   வெள்ளை, சில்வர்,  ப்ளூ, கருப்பு   மற்றும் கிரே உட்பட 5  வண்ணங்களில் கிடைகிறது.  
 
முன்புறத்தில் குரோம்  கிரில் மற்றும் பனி விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது. 

 அலாய் வீல், பின் நகர்வு பார்கிங் சென்சர்,பின் நகர்வு பார்கிங் கேமரா, ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள்,தானியங்கி முகப்பு விளக்குகள், பகல் நேரத்தில் ஒளிரும் LED விளக்குகள், சன் ரூப்,  டர்ன் இன்டிகேடருடன் கூடிய  கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் மற்றும்   கைபிடிகளும் கொடுக்கப்பட்டுள்ளது. 

இது 4780 மில்லி மீட்டர் நீலமும்  1885 மில்லி மீட்டர் அகலமும் 1880 மில்லி மீட்டர் உயரமும் கொண்டது மற்றும் 220 மில்லி மீட்டர் கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது.

உட்புறத் தோற்றம்

உட்புறம்  கருப்பு, சில்வர்  மற்றும் பீஜ்   வண்ண கலவையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் மர வேலைபாடுகளும் செய்யப்பட்டுள்ளது,

 பவர் விண்டோ, காற்றுப்பை, ஆண்டி லாக் ப்ரேக், கீலெஸ் என்ட்ரி, டச் ஸ்க்ரீன் ஆடியோ சிஸ்டம், ஸ்டீரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு,  தானியங்கி குளிரூட்டி, ஸ்டார்ட் /ஸ்டாப் பொத்தான், க்ரூஸ் கன்ட்ரோல்  ஆகியவை  இந்த மடலில் கிடைக்கும். 

குளிரூட்டி  மற்றும் பவர் ஸ்டீரிங்   ஆகியவையும் கிடைக்கிறது.

உபகரணங்கள்

டாப் வேரியண்டில் கிடைக்கும்  உபகரணங்கள். 
1.குளிரூட்டி 
2. காற்றுப்பை 
3.பவர் விண்டோ 
4.பனி விளக்குகள்
5.பின் நகர்வு பார்கிங் சென்சர், 
6.டர்ன் இன்டிகேடருடன் கூடிய  கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் 
7. பவர் ஸ்டீரிங் 
8.கீலெஸ் என்ட்ரி
9.ஸ்டீரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு
10. டச் ஸ்க்ரீன் ஆடியோ சிஸ்டம்
11.ஸ்டார்ட் /ஸ்டாப் பொத்தான்
12.க்ரூஸ் கன்ட்ரோல்
13.ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் 
14.சன் ரூப் 

விவரக்குறிப்பு

SPECIFICATION டொயோடா LC ப்ராடோ
Length 4780 mm
Width 1885 mm
Height 1880 mm
Wheel Base 2790 mm
Ground Clearance 220 mm
Steering type -
Turning Radius 58 m
Kerb Weight 2990 Kg
Seating 7
Fuel Tank Capacity 87 Ltr
Emission BS IV
Suspension Type System Front Double Wishbone
Suspension System Rear 4-Link with Air Spring
Tyre Size 265 / 60 R18
Tubeless Tyres Yes
Brake Front Ventilated Disc
Brake Rear Ventilated Disc
Cargo Volume -

என்ஜின்

;
ENGINE Diesel
Engine D-4D Diesel
Engine Displacement 2982 cc
Maximum Power 173 bhp @ 3400 rpm
Maximum Torque 410 Nm @ 1600-2800 rpm
Fuel Diesel
Top Speed 150 and 160 Kmph
Acceleration 12-13 sec
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System Common-Rail
Drive Type 4WD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 5 speed automatic