வெளிப்படுத்தப்பட்ட மெக்லரன் சென்னா மாடலின் படங்கள்

மெக்லரன் நிறுவனம் புதிய சென்னா மாடலை வெளிப்படுத்தியுள்ளது. இந்த மாடலின் பெயர் ஐர்டன் சென்னா எனும் பார்முலா ஒன் ரேஸ் வீரரின் பெயரின் இருந்து பெறப்பட்டுள்ளது. இவர் மூன்று முறை உலக சாம்பியன் பட்டத்தை மெக்லரன் மற்றும் ஹோண்டா கூட்டணியில் உருவான காரின் மூலம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாடல் மெக்லரன் 720S எனும் மாடலின் அடிப்படையில் தான் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் முழுவதும் கார்பன் பைபரால் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனால் இதன் எடை 1197 கிலோ கிராம் மட்டுமே உள்ளது. மேலும் இந்த மாடலின் ஏரோ டைனமிக்கிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் இது போன்ற அதிவேக ஹைப்பர் கார்களின் செயல்திறனில் ஏரோ டைனமிக் முக்கிய பங்கு வகிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. உட்புறம் மற்ற மெக்லரன் கார்கள் போலவே ஏராளமான வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த மாடலில் 4.0 லிட்டர் V8 ட்வின் டர்போ எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 778Bhp திறனையும் 800Nm இழுவைத்திறனையும் வழங்கும். மேலும் இந்த திறன் ஏழு ஸ்பீட் கொண்ட டியூவல் கிளட்ச் மூலம் வீலுக்கு கடத்தப்படுகிறது. இந்த மாடலின் விநியோகம் அடுத்த வருடம் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த மாடல் வெறும் 500 என்ற எண்ணிக்கையில் மட்டுமே தயாரிக்கப்படும். அனைத்திற்கும் மேலாக இந்த மாடல் ஒரு அதிகாரப்பூர்வமான ரோடு வெர்சன் மாடல் என்பது குறிப்பிடத்தக்கது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.