புத்தம் புதிய 2019 ஆம் ஆண்டு செவ்ரோலெட் ப்ளேசர் மாடலின் படங்கள்

செவ்ரோலெட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக புத்தம் புதிய 2019 ஆம் ஆண்டு ப்ளேசர் SUV மாடலை வெளிப்படுத்தியுள்ளது. செவ்ரோலெட் நிறுவனம் ப்ளேசர் எனும் பெயரில் ஒரு SUV மாடலை வெளியிட்டு வந்ததும், அதன் விற்பனை 2005 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. புத்தம் புதிய 2019 ஆம் ஆண்டு செவ்ரோலெட் ப்ளேசர் மாடலின் படங்களை இந்த தொகுப்பில் காணலாம்.

இந்த மாடல் கம்பீரமான மற்றும் ஒரு முழுமையான SUV மாடல் போண்டா தோற்றத்தை தருகிறது. மேலும் இதன் முன்புறம் பார்ப்பதற்கு செவ்ரோலெட் கேமரோ போன்ற தோற்றத்தை தருவதை தவிர்க்க முடியவில்லை. மேலும் இந்த மாடலில் 4G LTE Wi-Fi வசதியுடன் கூடிய டச் ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

2019 ஆம் ஆண்டு செவ்ரோலெட் ப்ளேசர் மாடல் 2.5 லிட்டர் மற்றும் 3.6 லிட்டர் V6 எஞ்சின்களில் கிடைக்கும். இதன் 2.5 லிட்டர் எஞ்சின் 193 bhp திறனையும் 255 Nm இழுவைத்திறனையும் வழங்கும் மற்றும் 3.6 லிட்டர் V6 எஞ்சின் 305 bhp திறனையும் 365 Nm இழுவைத்திறனையும் வழங்கும். இந்த இரண்டு எஞ்சின் மாடல்களிலும் ஒன்பது ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் 2019 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் அமெரிக்க சந்தையில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.