வெளிப்படுத்தப்பட்டது ஆஸ்டன் மார்டின் வேன்குவிஷ் ஷகட்டோ ஷூட்டிங் பிரேக்

ஆஸ்டன் மார்டின் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வேன்குவிஷ் ஷகட்டோ ஷூட்டிங் பிரேக் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஆஸ்டன் மார்டின் மற்றும் இத்தாலியை சேர்ந்த டிசைன் நிறுவனமான ஷகட்டோவின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட வேன்குவிஷ் ஷகட்டோ குடும்பத்தின் நான்காவது மாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாடல் எஸ்டேட் மாடலின் வடிவமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் மேற்கூரை டபுள் பப்பில் எனும் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் ஒரு எஸ்டேட் மாடல் என்றாலும் இருவர் மட்டுமே அமர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாடல்  வெறும் 99 என்ற எண்ணிக்கையில் மட்டுமே தயாரிக்கப்படும். 

இந்த மாடலில் மற்ற வேன்குவிஷ் ஷகட்டோ மாடல்களில் உள்ள அதே 6.0 லிட்டர் V12 எஞ்சின் தான் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின்  அதிகபட்சமாக 600 Bhp திறனையும் மற்றும் 630Nm  இழுவைத்திறனையும் வழங்கும். இந்த திறன் எட்டு ஸ்பீட் கொண்ட ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் மூலம் பின்புற வீலுக்கு கடத்தப்படுகிறது. மேலும் இந்த மாடல்  2018 ஆம் ஆண்டு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.