2018 பென்ட்லீ கான்டினென்டல் GT3 ரேஸ் கார் மாடலின் படங்கள்

பென்ட்லீ மோட்டார் ஸ்போர்ட் நிறுவனம் இரண்டாம் தலைமுறை கான்டினென்டல் GT3 ரேஸ் கார் மாடலை வெளிப்படுத்தியுள்ளது. இதன் முதல் தலைமுறை மாடல் 500 க்கும் மேற்பட்ட போட்டிகளில் பங்குபெற்றுள்ளதும் 40 க்கும் மேற்பட்ட வெற்றிகளை குவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

இந்த மாடல் புதிய பென்ட்லீ கான்டினென்டல் GT ரோடு கார் மாடலை அடிப்படையாக கொன்டு முந்த தலைமுறை ரேஸ் கார் மாடலின் அம்சங்கள் பொருத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் 4.0 லிட்டர் ட்வின் டர்போ V8 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் அதிகபட்சமாக 550Bhp திறனை வழங்கும். இந்த மாடலின் ஏரோ டைனமிக், சஸ்பென்ஷன் மற்றும் பிரேக் ஆகிய அமைப்புகளும் மாற்றப்பட்டுள்ளது. இந்த புதிய  பென்ட்லீ கான்டினென்டல் GT3 ரேஸ் கார் மாடல் 2018 ஆம் ஆண்டு முதல் போட்டிகளில் பங்குபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.