மஹிந்திரா தார் மாடலின் புதிய கஸ்டமைசேஷன் கான்செப்டை வெளியிட்டது DC டிசைன்

இந்தியாவை சேர்ந்த DC டிசைன் நிறுவனம் மஹிந்திரா தார் மாடலின் புதிய கஸ்டமைசேஷன் கான்செப்டை வெளிப்படுத்தியுள்ளது. தற்போது இதன் வரைபடங்கள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் இதன் தயாரிப்பு நிலை மாடல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூடிய மேற்கூரையுடன் மிகவும் வித்தியாசமாகவும் கம்பீரமாகவும் இந்த மாடல் உள்ளது. மேலும் இதன் மேற்கூரையில் விளக்குகளும் கொடுக்கப்பட்டுள்ளது. முன்புறத்தை விட பின்புறம் மிக அதிக மாறுதல்களை பெற்றுள்ளது. இதன் உட்புற வடிவமைப்பு தொடர்பான படங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை எனினும் உட்புறத்திலும் மாறுதல்கள் இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விவரங்களை விரைவில் தெரிந்து கொள்ள மௌவலுடன் தொடர்பில் இருங்கள்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.