வெளிப்படுத்தப்பட்டது அதிக செயல்திறன் கொண்ட ஆஸ்டன் மார்டின் DB11 AMR

பிரிட்டனை சேர்ந்த ஆஸ்டன் மார்டின் நிறுவனம் அதிக விலை கொண்ட DB11 AMR மாடலை வெளிப்படுத்தியுள்ளது. இந்த மாடலை ஜெர்மனியில் உள்ள AMR பெர்பார்மன்ஸ் நிலையத்தில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த மாடல் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் DB11 V12 மாடலுக்கு மாற்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த மாடலில் அதே 5.2 லிட்டர் V12 என்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது, ஆனால் செயல்திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 630Bhp திறனையும் 700Nm இழுவைதிறனையும் வழங்கும். மேலும் இந்த மாடல் 100 கிலோமீட்டர் வேகத்தை 2.7 வினாடிகளில் கடக்கும் மேலும் அதிகபட்சமாக மணிக்கு 337 கிலோமீட்டர் வேகம் வரையும் செல்லும் வல்லமை கொண்டது. இந்த மாடலில் எட்டு ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டுள்ளது. எஞ்சின் மட்டுமல்லாமல் இந்த மாடலில் சில ஒப்பனை மாற்றங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. 

ஆஸ்டன் மார்டின் DB11 AMR மாடல் கூடுதலாக சிக்னேச்சர் எடிசன் மாடலிலும் கிடைக்கும். இந்த சிறப்பு பதிப்பு மாடலின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் லைம் பச்சை வண்ணத்தில் சில அலங்காரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு பதிப்பு மாடல் நூறு என்ற எண்ணிக்கையில் மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.