ஜி.டி அருங்காட்சியத்தின் உலகின் முதல் காரான பென்ஸ் மோட்டார்வேகனின் நகல் சென்னை வந்தது

உலகில் முதன் முதலில் குதிரை இல்லாமல் இயங்கக்கூடிய 1886-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட பழம்பெரும் பென்ஸ் மோட்டார் வேகன் காரின் நகல் , சாதனை முயற்சியாக கோவையில் இருந்து சென்னைக்கு ஓட்டி வரப்பட்டது. 

பென்ஸ் கார்கள் என்பது உலகம் முழுக்க பிரசித்தி பெற்ற கார் வகைகளாகும். கார்ல் பென்ஸ், 1879 ஆம் ஆண்டு, உலகின் முதல் எரிபொருளால் வேலை செய்யும் தானியங்கி காரை வடிவமைத்தார். அதற்கு அவர் இட்ட பெயர், �பென்ஸ் மோட்டார்வேகன்� இதுவே உலகின் முதல் பென்ஸ் காராகும். ஜனவரி, 29, 1886ல் இதற்கு காப்புரிமை பெறப்பட்டதால் அந்நாளே காரின் பிறந்தநாளாக அறியப்படுகிறது. 

இக்கார் கண்டுபிடிக்கப்பட்டாலும், அது சிறு தொலைவுகளுக்கு செல்ல மட்டுமே உகந்ததாய் இருந்தது. இன்று கார்கள் பல்லாயிரம் கிலோமீட்டர்கள் சுலபமாக ஓடுகின்றன என்றால், அதற்கு காரணமாய் விளங்கியவர் கார்ல் பென்ஸின் மனைவி �பெர்த்தா பென்ஸ்�. தனது மகன்கள், யூஜன் மற்றும் ரிச்சர்ட்-ன் உதவியுடன் பென்ஸ் காரை பயன்படுத்தி உலகின் முதல் நெடுந்தூர பயணத்தை 1888ல் மேற்கொண்டார். பெர்த்தா பென்ஸ் தன் கணவர் வடிவமைத்த காரில் சில மாறுதல்களை பயணத்தின்பொது செய்து அதை மேம்படுத்தினார். 194 கிலோமீட்டர்கள் கொண்ட இப்பயணம் ஒரு சரித்திர நிகழ்வாகும். இதன்பிறகே, பென்ஸ் நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டு, இன்று உலகப்புகழ் பெற்றுள்ளது.

இதுதான் அதிக தூரம் இந்த காரை ஓட்டியதாக கருதப்பட்டது. மீண்டும் சரித்திரத்தில் புதிய சாதனையை உருவாக்கும் விதமாக 500 கிலோ மீட்டர் இடைநில்லாமல் கோவையில் இருந்து சென்னைக்கு அந்த கார் ஓட்டி வரப்பட்டது. மொத்தம் 6 ஓட்டுநர்கள் மாறிமாறி ஓட்டி வந்தனர். இதுபோன்ற ஒரு பழைய வாகனம் 500 கிலோமீட்டர் தொடரோட்டமாக கொண்டுவரப்பட்டது உலகிலேயே இதுவே முதல்முறையாகும்

பென்ஸ் மோட்டார் நிறுவனத்திடம் இருந்து அந்த காரின் வடிவமைப்பு தகவல்களை பெற்று 430 பாகங்களுக்கான வரைபடங்களை உருவாக்கி, அதை உபயோகித்து அனைத்து பாகங்களும் தயாரிக்கப்பட்டு  6 மாதங்களுக்கு முன்பு அந்த கார் தயாரிக்கப்பட்டதாகும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.