ரெஸ்வனி டேங்க் மாடலின் படங்கள்

இறுதியாக ரெஸ்வனி நிறுவனம் ராணுவ வாகனத்தின் அடிப்படையிலான டேங்க் மாடலை வெளிப்படுத்தியுள்ளது. மிகவும் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்ட பெர்பார்மன்ஸ் SUV மாடலின் படங்களையும் விவரங்களையும் இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

இந்த மாடல் மிகவும் வித்தியாசமாகவும் புதுமையான வடிவத்திலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் 3.6 லிட்டர் V6 மற்றும் 6.4 லிட்டர் V8 என இரண்டு எஞ்சின் ஆப்ஷனில் கிடைக்கும். இதில் 6.4 லிட்டர் V8 எஞ்சின் 500Bhp திறனை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த மாடலில் ஆள் வீல் டிரைவ் சிஸ்டம், தெர்மல் நைட் வியூ சிஸ்டம் என ஏராளமான வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாடல் 178,000 டாலர் மதிப்பில் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. இதன் விநியோகம் இந்த வருட இறுதியில் அல்லது அடுத்த வருட ஆரம்பத்தில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.