வெளிப்படுத்தப்பட்டது புதிய தலைமுறை போர்ச்சே 911 கரேரா

போர்ச்சே நிறுவனம் புதிய தலைமுறை 911 கரேரா மாடலை தற்போது நடைபெற்று வரும் 2018 LA  ஆட்டோ கண்காட்சியில் வெளிப்படுத்தியுள்ளது. இது எட்டாவது தலைமுறை மாடல் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மடலின் வெளிப்புற தோற்றமும் கிளாசிக் வடிவமைப்பிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் கரேரா S மற்றும் கரேரா 4S என இரண்டு வேரியன்ட்டுகளில் காட்சிப்படுத்தப்பட்டது. 

இதன் வெளிப்புற வடிவமைப்பில் அதிக மாற்றங்கள் இல்லை, எனினும் இந்த மாடல் முந்தய மாடலை விட சற்று பெரியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் உட்புறத்தில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது, இந்த மாடலில் புதிய 10.9-இன்ச் சென்டர் கன்சோல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மடலில் 3.0-லிட்டர் ஆறு சிலிண்டர் டர்போ எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 450 bhp திறனும் 530 Nm இழுவைதிறனும் கொண்டது. இது முந்தய மாடலை விட ௩௦பிப் அதிக திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த மாடல் புதிய எட்டு ஸ்பீட் கொண்ட PDK ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷனில் கிடைக்கும்.  இதன் AWD டிரைவ் சிஸ்டம் கொண்ட கரேரா 4S  மாடல் 100 கிலோமீட்டர் வேகத்தை 3.6 வினாடிகளிலும், RWD டிரைவ் சிஸ்டம் கொண்ட கரேரா S  மாடல் 100 கிலோமீட்டர் வேகத்தை 3.7 வினாடிகளிலும் கடக்கும் வல்லமை கொண்டது. மேலும் இந்த மாடல் ஏழு ஸ்பீட் கொண்ட மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடன் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த புதிய போர்ச்சே 911 கரேரா மாடலில் புதிய வெட் டிரைவிங் மோடும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் நைட் விஷன் தெர்மல் கேமரா, அடாப்டிவ் குரூஸ் கன்ட்ரோல், அட்டானமஸ் எமெர்ஜென்சி அசிஸ்ட் என ஏராளமான பாதுகாப்பு வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த மாடல் 2019 ஆம் ஆண்டு மத்தியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.