வோல்க்ஸ்வேகன் ID R பைக்ஸ் பீக் மாடலின் படங்கள் வெளிப்படுத்தப்பட்டது

வோல்க்ஸ்வேகன் நிறுவனம் இறுதியாக பழமையான பைக்ஸ் பீக் ஹில் க்ளைம்ப் ரேஸ் போட்டிக்கென பிரத்தியேக ID R பைக்ஸ் பீக் எலெக்ட்ரிக் ரேஸ் கார் மாடலின் படங்களை வெளியிட்டுள்ளது. வோல்க்ஸ்வேகன் நிறுவனம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பழமை வாய்ந்த பைக்ஸ் பீக் ஹில் க்ளைம்ப் ரேஸ் போட்டியில் மீண்டும் களமிறங்கும் என ஒரு டீசர் மூலம் வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 

வோல்க்ஸ்வேகன் நிறுவனம் கடைசியாக 1987 ஆம் ஆண்டு கோல்ப் மாடலுடன் இந்த பைக்ஸ் பீக் ஹில் க்ளைம்ப் ரேஸ் போட்டியில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. மேலும் வோல்க்ஸ்வேகன் நிறுவனம் இந்த மாடலின் செயல்திறன் தொடர்பான விவரங்களை வெளியிடவில்லை. எனினும் இந்த மாடல் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடல் என்பதை மட்டும் வெளியிட்டுள்ளது. 

மேலும் இந்த மாடல் தொடர்பான விவரங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மௌவலுடன் தொடர்பில் இருங்கள்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.