லேப் டாப் அளவு மட்டுமே கொண்ட மிகச்சிறிய கார் (Walk car)

6 வயது ஆன ஜப்பானை சேர்ந்த எஞ்சினியர் குனைகோ சைட்டோ, கோகோ மோட்டார் நிறுவனத்துடன் இணைந்து இந்த லேப்டாப்  அளவு மட்டுமே கொண்ட  மிகச்சிறிய வாக் காரை கண்டுபிடித்துள்ளார். இதை ஒரு பையில் வைத்து எளிதாக எடுத்து செல்லலாம். இந்த வாக் கார்  ஸ்கேட் போர்ட் போலவே வேலை செய்கிறது. இதன் மீது ஏறி நின்றாலே போதும்  இந்த கார் தானாகவே செல்லும் மீண்டும் இறங்கினால் தானாகவே நின்று விடும். மேலும் பாதையில் ஏதேனும் தடைகள் குறுக்கிட்டாலும் தானாகவே நின்று விடும். 

இறக்கத்தில் மட்டுமல்ல, செங்குத்தான இடங்களில் ஏறிச் செல்லவும் முடியும். எந்தப் பகுதியில் திரும்ப வேண்டுமோ, அந்தப் பகுதியை நோக்கி உடல் எடையை அழுத்தினால் போதும். தானாக இது திரும்பிவிடும். இந்த கார் 120 கிலோகிராம் வரை எடை தாங்கும். மேலும் இது இரண்டு விதங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒன்று வீடுகளில் மற்றும் சமதளமான பகுதிகளில் மட்டும் இயங்ககூடியது. இது 2 கிலோகிராம் எடை கொண்டது. மற்றொன்று சற்று கடினமான பகுதிகளில் இயங்ககூடியது. இது 3 கிலோகிராம் எடை கொண்டது.  இந்த கார் அதிகபாட்சமாக மணிக்கு 10 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும். மேலும் 3 மணி நேரம் சார்ஜ் செய்தால் 12 கிலோமீட்டர் தூரம் வரை செல்லும். 

வாக் காரில் நின்றுகொண்டு எடை சுமந்த ட்ராலிகள், சக்கர வண்டிகள் போன்றவற்றைக் கைகளால் பிடித்துக்கொண்டால், எளிதில் அவற்றையும் எடுத்துச் செல்ல முடியும். 2016 ஆம் ஆண்டு விற்பனை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.