அறிமுகப்படுத்தப்பட்டது வோல்க்ஸ்வேகன் ID R பைக்ஸ் பீக் எலெக்ட்ரிக் ரேஸ் கார்

வோல்க்ஸ்வேகன் நிறுவனம் இறுதியாக பழமையான பைக்ஸ் பீக் ஹில் க்ளைம்ப் ரேஸ் போட்டிக்கென பிரத்தியேக ID R பைக்ஸ் பீக் எலெக்ட்ரிக் ரேஸ் கார் மாடலை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. வோல்க்ஸ்வேகன் நிறுவனம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பழமை வாய்ந்த பைக்ஸ் பீக் ஹில் க்ளைம்ப் ரேஸ் போட்டியில் மீண்டும் களமிறங்கும் என ஒரு டீசர் மூலம் வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்த கார் வரும் ஜூன் 24 ஆம் தேதி கொலராடோவில் நடைபெறும் பைக்ஸ் பீக் ஹில் க்ளைம்ப் ரேஸ் போட்டியில் கலந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த மாடல் 100Kmph வேகத்தை வெறும் 2.25 வினாடிகளில் கடந்து விடும் வல்லமை கொண்டது. இது பெரும்பாலான பார்முலா 1 மற்றும் பார்முலா E மாடல்களை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாடலில் 680Bhp திறனையும் 649Nm இழுவைத்திறனையும் வழங்கும் இரண்டு மின் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் லித்தியம்-அயர்ன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் வெறும் 1133 கிலோ கிராம் மட்டுமே எடை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

ரோமைன் டூமாஸ் வோல்க்ஸ்வேகன் ID R பைக்ஸ் பீக் எலெக்ட்ரிக் ரேஸ் கார் மூலம் இந்த வருடம் போட்டியில் கலந்து கொள்ள போகிறார். வோல்க்ஸ்வேகன் நிறுவனம் கடைசியாக 1987 ஆம் ஆண்டு கோல்ப் மாடலுடன் இந்த பைக்ஸ் பீக் ஹில் க்ளைம்ப் ரேஸ் போட்டியில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.