இனி ஒரிஜினல் லைசென்ஸ் தேவையில்லை: டிஜிட்டல் லைசென்ஸே போதுமானது

வாகன ஓட்டிகள் ஒரிஜினல் லைசன்ஸ், ஆர்சி புக் உள்ளிட்ட ஆவணங்களை எடுத்து செல்ல தேவையில்லை, டிஜிட்டல் ஆவணங்கள் போதுமானது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலத்துறை அமைச்சகம் டிஜிலாக்கர் அல்லது mபரிவகன் போன்ற மொபைல் ஆப் தளங்களில் சேமிக்கப்பட்டட டிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி. புக், இன்சூரன்ஸ் உள்ளிட்ட ஆவணங்களை சட்டபூர்வ ஆதாரமாக எடுத்துக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது. 

டிஜிலாக்கர் அல்லது mபரிவகன் போன்ற ஆப்பை டவுண்லோடு செய்து அதில் நம் ஆதார் எண்ணை கொண்டு உறுதி செய்ய வேண்டும். அதன் பின், டிரைவிங் லைசன்ஸ் மற்றும் பதிவு ஆவணத்தின் எண்ணை அதில் பதிவு செய்து ஆவணங்களை பதிவிறக்கம் செய்து சேமித்து கொள்ள வேண்டும். பிறகு சோதனையின் போது இந்த செயலியில் உள்ள QR கோடை காண்பித்தாள் போதுமானது. அதன் மூலம் அவர்கள் அணைத்து விவரங்களையும் பெறமுடியும். இது காவல் துறையினருக்கு பெரும் உதவிகரமானதாகவும் எளிமையானதாகவும் இருக்கும். 

இன்சூரன்ஸ், மற்றும் இன்சூரன்ஸ் புதுப்பித்தல் குறித்த தகவல்கள் நேரடியாக இந்த செயலிகளுக்கு இன்சூரன்ஸ் நிறுவனத்திடமிருந்து சென்று விடுவதால், இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களை எளிதாக அடையாளம் காணவும் முடியும். இனிமேல் ஒரிஜினல் ஆவணங்களை எங்கேயாவது எடுத்து சென்று தொலைத்து விட்டு, திரும்ப பெற அல்லாட வேண்டிய அவசியம் இருக்காது.  

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.