இங்கிலாந்தில் வெளியிடப்பட்டது உலகின் முதல் குழந்தைகளுக்கான ஏர்பேக் இருக்கை

கார் இருக்கை தயாரிப்பதில் உலகின் முன்னணி நிறுவனமான மாக்ஸி-கோசி நிறுவனம் இங்கிலாந்தில் உலகின் முதல் குழந்தைகளுக்கான ஏர்பேக் இருக்கை மாடலை வெளியிட்டுள்ளது. மாக்ஸி-கோசி நிறுவனம் ஹெலிட் எனும் ஏர்பேக் தயாரிக்கும் நிறுவனத்துடன் இணைந்து இந்த புதிய குழந்தைகளுக்கான ஏர்பேக் இருக்கை மாடலை தயாரித்துள்ளது.

இந்த இருக்கையானது தற்போது இங்கிலாந்தில் விற்பனைக்கு கிடைக்கிறது. மேலும் இந்த இருக்கையில் தோல் பகுதியில் இரண்டு காற்றுப்பைகள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காற்றுப்பைகள் குழந்தையின் கழுத்து, தோள்பட்டை, முகம் ஆகிய பகுதிகளை பாதுகாக்கும் வண்ணம் விரிவடையும். மேலும் இது குழந்தையை விபத்தில் இருந்து 55 சதவீதம் பாதுகாக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த இருக்கை விபத்தின் போது குழந்தையின் பாதுகாப்பிற்கு பெரும் உதவியாக இருக்கும் எனவும், மேலும் இந்த காற்றுப்பையினால் ஏற்படும் அழுத்தம் மிக குறைவானதாகவே இருக்கும், அதனால் குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது எனவும் தெரிவித்துள்ளது மாக்ஸி-கோசி.

 இதன் காற்றுப்பைகள் வெறும் 0.05 வினாடிகளில் விரிவடைந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இருக்கையை ஏற்கனவே உள்ள இருக்கையின் மீதே பொருத்திக்கொள்ளலாம். அடிப்புறம் 360 டிகிரி கோணம் வரை சுற்றும் வசதி இருப்பதால் இதை பொருத்துவது மிகவும் எளிது. மேலும் இந்த இருக்கையில் 2 முதல் 3 ஆதி வரை உயரம் உள்ள குழந்தைகள் அமர முடியும். மேலும் இதன் அடிப்புறம் உள்ள சென்சார் மூலம் தான் இது விபத்து நடப்பதை உணர்கிறது என்பது மிக முக்கியமான ஒன்று.

 தற்போது இந்த இருக்கை 783 டாலர் (இந்திய மதிப்பில் ரூ 51,000) மதிப்பில் இங்கிலாந்தில் கிடைக்கிறது. பைக் ரைடர்களுக்கான ஏர்பேக் மாடலை சோதனை செய்து வருவதாகவும் மாக்ஸி-கோசி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.